Saturday, May 26, 2012

ஹாரூத் மாரூத் என்போர் வானவர்களா?

உரை : பி.ஜைனுல் ஆபிதீன்
எழுத்து வடிவில் : முஹம்மத் தாஹா, கடையநல்லூர்
நபியவர்களுக்கு யூதர்களால் சூனியம் வைக்கப்படுவதாகச் சொல்லப்படும் செய்தி, குர்ஆனிலுள்ள பல்வேறு வசனங்களுக்கு நேரடியாக முரண்படுவதாலும், அது சம்பந்தமாக அறிவிக்கப்படுகிற செய்திகளில் பல்வேறு முரண்பட்ட வார்த்தைகள் இடம்பெற்றிருப்பதாலும் நபியவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டது என்ற செய்தி சரியானதாக இல்லை. ஒரு மனிதரை சூனியம் செய்து அழிக்கவோ ஒழிக்கவோ முடியாது என்பது தான் இதுவரை நாம் பார்த்ததின் சாராம்சம்.
இதன் தொடர்ச்சியாக, சூனியம் சம்பந்தமாக திருக்குர்ஆனின் 2 வது அத்தியாயமான சூரத்துல் பகராவின் 102 வது வசனம் தெளிவாகப் பேசுகிறது.
இன்று நம் காலத்தில் வாழ்கிற பெயர் தாங்கி ஆலிலிம்கள் நாங்கள் ஜின்களை அடக்கிவைத்திருக்கிறோம் என்றும் எங்களுக்கு மாயமந்திரம் தெரியும், பில்லிலிசூனியம் தெரியும் என்றும் கூறி மக்களைப் பயங்காட்டி பிழைப்பு நடத்திக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். அது போல் நபிகள் நாயகத்தின் காலத்தில் வாழ்ந்த யூதர்களும் அன்றைய மக்களிடத்தில், எங்களை ஏதாவது செய்தீர்களென்றால் நாங்கள் சூனியம் செய்து உங்களை வீழ்த்திவிடுவோம் என்று சொல்லிலி மாயமந்திரங்களாலும் பில்லிலிசூனியத்தினாலும் அச்சுறுத்தி வந்தனர்.
இந்த சூனியத்தை அவர்கள் எதனடிப்படையில் நியாயப்படுத்தி வந்தார்களென்றால், சுலைமான் நபியைக் காரணம் காட்டித்தான்.
சுலைமான் இறைமறுப்பாளராக இருக்கவில்லை; சூனியத்தைக் கற்றுக் கொடுத்த ஷைத்தான்கள் தான் இறைமறுப்பாளர்களாக ஆனார்கள் என்ற சொற்றொடரில் இருந்து இதை நாம் அறியலாம். சுலைமான் நபி மூலமே எங்களுக்கு சூனியம் வந்தடைந்த்து என்று கூறுவோருக்கு மறுப்பாக சூனியம் என்பது இறை மறுப்பாகும். அதை சுலைமான நபி செய்ததில்லை என்று அல்லாஹ் அவர்களுக்கு மறுப்பு கொடுக்கிறான்.
சுலைமான் நபியவர்களுக்கு ஏராளமான சக்திகளை அற்புதமாக அல்லாஹ் கொடுத்திருந்தான். ஜின்கள் அவர்களுக்குக் கட்டுப்பட்டு நடந்தன. காற்றை அல்லாஹ் அவருக்கு வசப்படுத்திக் கொடுத்திருந்தான். பறவைகளும் எறும்புகளும் பேசுவதைக்கூட கேட்கிற அதிசயமான ஆற்றலையும்
அல்லாஹ் அவர்களுக்குக் கொடுத்திருந்தான். இதனால் தான் யூதர்கள், தாங்கள் செய்துவந்த சூனியத்தை நியாயப்படுத்துவதற்கு சுலைமான் நபிக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட இவ்வளவு அற்புதத்தையும் ஆற்றலையும் சூனியத்தினால்தான் அவர்கள் பெற்றார்கள் என்று சொல்லிலி சூனியத்தை நியாயப்படுத்தினார்கள். நாங்களும் சுலைமான் நபி வழியாக வாழையடி வாழையாக அதைக் கற்று வருகிறோம் என்று சொல்லிலியும் வந்தனர். இந்த சூனியக்கலை இறைவனால்தான் நபி சுலைமான்
அவர்களுக்கு வழங்கப்பட்டது என்று மதத்தின் பெயராலேயே மக்களை நம்பவைத்தனர்.
இன்றும்கூட நமது சமூதாய பெயர்தாங்கி ஆலிம்கள் தகடு, தாயத்து, பில்லிலிசூனியம், பேய்பிசாசு என்பதை நம்ப வைப்பதற்கு குர்ஆன் ஹதீஸ் என்றும் நமது முன்னோர்களான பெரும்பெரும் இமாம்கள் இப்படிச் சொல்லிலித் தந்தார்கள் என்றெல்லாம் சொல்லிலி மதச்சாயம் பூசி மக்களை நம்ப வைக்கின்றனர். இதே போல் தான் யூதர்களின் நடவடிக்கைகளும் இருந்தன.
மேலும் இந்த சூனியக்கலை ஜிப்ரயீல் மற்றும் மீக்காயீல் என்ற இரண்டு வானவர்கள் வழியாகத்தான் நபி சுலைமான் அவர்களுக்குக் கிடைத்தது என்றும் சொல்லிலிக் கொண்டிருந்தார்கள். இப்படி தங்களது பித்தலாட்டத்தைச் சரிக்கட்டுவதற்காக மேற்சொன்ன காரணங்களைக் கூறிக்கொண்டிருந்த யூதர்களைக் குறித்து அருளப்பட்ட வசனம்தான் அல்குர்ஆன் 2 ஆம் அத்தியாயம் 102 வது வசனம்.
இந்த வசனம் ஸிஹ்ரை வைத்து ஏமாற்றுபவர்கள் சம்பந்தமாகவே அருளப்பட்ட வசனம். இதில் அல்லாஹ்,
ஸுலைமானின் ஆட்சியில் ஷைத்தான்கள் கூறியதை இவர்கள் பின்பற்றினார்கள். அவ்விரு வானவர்களுக்கும் (சூனியக்கலை) அருளப்படவில்லை. ஸுலைமான் (ஏக இறைவனை) மறுக்கவில்லை. பாபில் நகரத்தில் சூனியக்கலையை மக்களுக்குக் கற்பித்த ஹாரூத், மாரூத் என்ற ஷைத்தான்களே மறுத்தனர். நாங்கள் படிப்பினையாக இருக்கிறோம். எனவே மறுத்துவிடாதே! என்று கூறாமல் அவ்விருவரும் யாருக்கும் கற்றுக் கொடுப்பதில்லை. கணவனுக்கும், மனைவிக்குமிடையில் பிரிவினை ஏற்படுத்துவதையே அவ்விருவரிடமிருந்தும் அவர்கள் கற்றுக் கொண்டனர்.
அல்லாஹ்வின் விருப்பமின்றி யாருக்கும் எந்தத் தீங்கும் அவர்களால் செய்யமுடியாது. அவர்களுக்குத் தீங்களிப்பதையும், பயனளிக்காததையும் கற்றுக் கொண்டார்கள். இதை விலைக்கு வாங்கியோருக்கு மறுமையில் எந்தப் பாக்கியமும் இல்லை என்பதை உறுதியாக அவர்கள் அறிந்து வைத்துள்ளனர். தங்களை எதற்காக விற்றார்களோ அது மிகவும் கெட்டது. அவர்கள் அறிய வேண்டாமா?
(அல்குர்ஆன் 2:102)
சுலைமான் நபிக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை என்று கூறுவதுடன் இந்த சூனியம் எனும் பித்தலாட்டம் யாரால் கற்பிக்கப்பட்டது என்பதை அடுத்து கூறுகிறான். சூனியத்தைக் கற்றுக் கொடுத்து ஷைத்தான்கள் காபிர்களாகி விட்டனர் என்பதில் இருந்து இதை ஷைத்தான்கள் தான் கற்றுக் கொடுத்தனர் என்று அல்லாஹ் கூறுகிறான்.
இந்த இடத்தில் ஷைத்தான் என்று சொல்லப்படுவது தீய மனிதர்களைத் தான் என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். வீணாண காரியத்தை செய்கின்ற மனிதர்களுக்கும் ஷைத்தான் என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது என்பதை கடந்த வசனங்களில் விளக்கும் போதே சொல்லிலியிருக்கிறோம். உதாரணமாக கவிஞர்களை ஷைத்தான் என்று குர்ஆனிலும் நபிவழியிலும் பயன்படுத்துவதாகப் பார்த்தோம். மனிதனையும் ஷைத்தான் என்று சொல்வதற்கு நிறைய சான்றுகள் இருக்கிறது என்பதையும் பார்த்தோம்.
இதே 2 அத்தியாயமான சூரத்துல் பகராவில் மனிதனை ஷைத்தான் என்று சொல்வதற்கு ஆதாரம் இருக்கிறது. முனாஃபிக்குகளைப் பற்றிப் பேசுகிற வசனத்தில், கெட்ட தலைவர்களை ஷைத்தான் என்ற கருத்தில் அல்லாஹ் பயன்படுத்துகிறான்.
நம்பிக்கை கொண்டோரை அவர்கள் சந்திக்கும் போது நம்பிக்கை கொண்டுள்ளோம் எனக் கூறுகின்றனர். தமது ஷைத்தான்களுடன் தனித்திருக்கும்போது நாங்கள் உங்களைச் சேர்ந்தவர்களே. நாங்கள் (அவர்களை) கேலிலி செய்வோரே எனக் கூறுகின்றனர்.
(அல்குர்ஆன் 2:14)
மேற்சொல்லப்பட்ட வசனத்தில் ஷைத்தான்களுடன் முனாஃபிக்குகள் தனித்திருக்கும் போது என்றால், மக்கத்து குரைஷிக் காஃபிர்களிலுள்ள கெட்ட தலைவர்களுடன் தனித்திருக்கும் போது என்று பொருள்.
அதற்காக ஷைத்தான் என்ற வார்த்தைக்கு எல்லா இடத்திலும் கெட்ட மனிதர்கள் என்ற பொருள் கொள்ளக் கூடாது. அதிகமான இடங்களில் ஷைத்தான் என்ற வார்த்தைக்கு அப்படியே நேரடியாக ஷைத்தான் என்று தான் பொருள் கொள்ள வேண்டும்.  குறைந்த அளவில் ஷைத்தான் என்ற வார்த்தை தீங்கிழைக்கிற மனிதர்களுக்கும் விஷ ஜந்துக்களுக்கம் பயன்டுத்தப்படும். எனவே ஷைத்தான் என்ற வார்த்தைக்கு மனித ஷைத்தான் என்ற அர்த்தத்திலும் பயன்படுத்தப்படுவதை நாம் காண்கிறோம். இப்படி மனிதனை ஷைத்தான் என்று பயன்படுத்தப்பட்டுள்ள இடங்களில் இந்த 2:102 வசனமும் ஒன்றாகும்.
இந்த வசனத்தில் பொதிந்துள்ள கருத்து மிகவும் கவனிக்கத்தக்க விசயமாகும். அதாவது சுலைமான் அவர்கள் இந்த சூனியக்கலையைக் கற்றுக் கொடுக்கவில்லை என்றும் அப்படி சூனியக்கலையைக் கற்றுக் கொள்வதும், கற்றுக் கொடுப்பதுவும் குஃப்ர் (இறைவனை மறுப்பது) என்றும் அல்லாஹ் சொல்லுகிறான். குஃப்ர் என்பது சாதாரணப் பாவமில்லை. இறைவனை நிராகரிப்பதுவும் ஸிஹ்ரைக் கற்றுக் கொள்வதும் பாவத்தில் சமமானது என்கிறான். எனவே இப்படிப்பட்ட வேலையை சுலைமான் நபியவர்கள் செய்யவே மாட்டார்கள். இப்படிப்பட்ட வேலையை சுலைமான் நபியவர்கள் செய்யவே மாட்டார்கள் என்பதைக் குறிக்க மூலத்தில் وَمَا كَفَرَ سُلَيْمَانُ (வமா கஃபர சுலைமானு) என்று வந்துள்ளது. எனவே அவர் எப்படி நிராகரிப்பவராக இல்லையோ அவர் ஸிஹ்ரும் செய்து இருக்க மாட்டார். ஏனெனில் ஸிஹ்ர் என்பது நிராகரிப்பாகும் என்று இறைவன் இந்த வசனத்தில் சொல்கிறான்.
பிறகு யார் இந்த சூனியக் கலையைக் கற்றுக் கொடுத்திருப்பார் என்பதை அல்லாஹ்வே சொல்லுகிறான். சுலைமான் நபி காலத்தில் இருந்த சில கெட்ட மனிதர்கள்தான் இதைக் கற்றுக் கொடுத்தனர் என்கிறான். சில கெட்ட மனித ஷைத்தான்கள் என்பதைக் குறிக்க மூலத்தில்,
وَلَكِنَّ الشَّيَاطِينَ كَفَرُوا يُعَلِّمُونَ النَّاسَ السِّحْرَ (வலாகின்னஷ் ஷையாதீனு கஃபரூ(வ்) யுஅல்லிமூனன்னாஸஸ் ஸிஹ்ர) என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. கெட்டவர்கள்தான் சூனியத்தைக் கற்றுக் கொடுத்து காஃபிராகி விட்டார்கள் என்று சொல்கிறான்.
எனவே இந்த வசனத்தின் மூலம் இறைவன் நமக்குச் சொல்லும் செய்தி, ஸிஹ்ர் என்ற சூனிய வித்தைக்கும் சுலைமான் நபியவர்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. மாறாக, சில ஷைத்தான்கள் காலங்காலமாக சொல்லிலிக் கொடுத்து விட்டார்கள். அதற்கு மார்க்கத்தின் அங்கீகாரம் இருப்பதைப் போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி மக்களை ஏமாற்றி சூனியத்தைச் செய்து வருகிறார்கள். எனவே இதிலிலிருந்தே இந்த வசனத்தில் ஷைத்தான் என்ற வார்த்தைக்கு மனித ஷைத்தானைத் தான் குறிக்கிறது என்பது விளங்குகிறது.
எப்படியெனில், ஸிஹ்ரைக் கற்றுக் கொடுத்ததின் மூலம் ஷைத்தான்கள் காஃபிராகி விட்டார்கள் என்கிறான். ஆனால் உண்மையில் ஷைத்தான் ஸிஹ்ரைக் கற்றுக் கொடுத்துத்தான் காஃபிராக வேண்டும் என்பதில்லை. அவன் ஏற்கனவே காஃபிராகத்தான் இருந்து கொண்டிருக்கிறான்.
அப்படியெனில் ஸிஹ்ரைக் கற்றுக் கொடுத்துத்தான் காஃபிராக மாறி விட்டனர் என்று அல்லாஹ் சொல்வதின் மூலம், இந்த இடத்தில் ஷையாதீன் என்ற வார்த்தை மனிதர்களிலுள்ள கெட்டவர்களைக் குறிப்பதற்குத்தான் பயன்படுத்தப்படுகிறது என்பதைத் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்.
ஆக, நபியவர்கள் காலத்தில் வாழ்ந்த யூதர்கள், சுலைமான் நபி காலத்தில் கெட்டமனிதர்கள் சொல்லிலிக் கொடுத்த சூனியத்தை சுலைமான் நபியுடன் பொய்யாகச் சம்பந்தப்படுத்தி தங்களது சுயநலத்தை அடைந்து கொண்டிருந்தனர். அதனால்தான் அல்லாஹ் சுலைமான் நபி மறுப்பவராக இல்லை என்று யூதர்களுக்குச் சம்மட்டி அடிகொடுத்து யூதர்கள் சுலைமான் நபி மீது சொன்ன பொய்க்காரணத்தைக் களைகிறான்.
அதற்கடுத்ததாக இறைவன், وَمَا أُنزِلَ عَلَى الْمَلَكَيْنِ   (வமா உன்ஸில அலல் மலக்கைனி) என்று சொல்லுகிறான். இந்த வசனத்தில் இறைவன் மலக்கைனி என்று பயன்படுத்துகிறான். மலக் என்றால் அரபி மொழியில் ஒரு வானவர் என்று அர்த்தம். அல்மலக்கைனி என்றால் அந்த இரண்டு வானவர்கள் என்று அர்த்தம். எல்லா மொழியிலும் ஒருமை பன்மை மட்டும்தான் இருக்கும். ஆனால் அரபி மொழி போன்ற ஒருசில மொழிகளில் மட்டும் ஒருமை, இருமை, பன்மை போன்ற மூன்று வார்த்தை அமைப்பு உள்ளது. அதாவது ஒரு மனிதனைக் குறிப்பதற்கு ஒரு வார்த்தை, இரண்டு மனிதர்களைக் குறிப்பதற்கு வேறு ஒரு வார்த்தை, இரண்டுக்கு மேலுள்ள மனிதர்களைக் குறிப்பதற்கு  வேறு ஒருவார்த்தை. ஆனால் தமிழில் மனிதன்லிமனிதர்கள் பேனாலிபேனாக்கள், கழுதைலிகழுதைகள், குதிரைலிகுதிரைகள் என்று சொல்கிறோம். ஆங்கிலம் உட்பட பலமொழிகளிலும் இப்படித்தான் உள்ளன.
ஆனால் அரபு மொழியில் மலக் (மலக்குன்) லி ஒரு வானவர், மலக்கானி அல்லது மலக்கைனி லி இரண்டு வானவர்கள், மலாயிகத்து லி பல வானவர்கள் என்று அர்த்தம். இப்படி ஒருமைக்கும் இருமைக்கும் பன்மைக்கும் தனித்தனியான வார்த்தை அமைப்பைக் கொண்ட மொழி அரபுமொழி. எனவே இந்த அடிப்படையில் மேற்சொன்ன வசனத்தில், மலக்கைனி என்று இருமையாக வந்துள்ளதால் இரண்டு வானவர்கள் என்று மொழி பெயர்க்க வேண்டும். அதுவும் வெறுமனே மலக்கைனி என்று வராமல் மலக்கைனி என்ற வார்த்தைக்கு முன்னால் அல் (ஒரு அலீஃப் மற்றும் ஒரு லாம் சேர்ந்தது) என்ற வார்த்தை வந்துள்ளது.
இப்போது இன்னொரு அரபிமொழி இலக்கணத்தையும் இந்த இடத்தில் சொன்னால் தான் சரியாக இந்த வசனத்தின் வார்த்தை அமைப்பைப் புரிந்து கொள்ள முடியும். அரபி மொழியில் ஒரு பெயர்ச்சொல் வார்த்தைக்கு முன்னால் அல் (ஒரு அலீஃப் மற்றும் ஒரு லாம் சேர்ந்தது) என்ற இரண்டு எழுத்துக்களைச் சேர்த்தால், அந்த என்ற அர்த்தத்தைச் சேர்த்து பெயர்ச்சொல் பொருள் தரும். உதாரணமாக மலக் என்ற வார்த்தையை எடுத்துக் கொள்ளலாம்.
மலக் ஒரு வானவர். மலக்கைனி லி இரண்டு வானவர்கள். அல் மலக்கைனி  அந்த இரண்டு வானவர்கள்  என்று பொருள்வரும்.
இதே போன்று வேறொரு வார்த்தையையும் உதாரணத்திற்கு எடுத்துக் கொள்ளலாம். கிதாப் என்றால் ஒருபுத்தகம். அல் கிதாப் என்றால் அந்தப் புத்தகம் என்று அர்த்தம். அது என்ன அந்தப் புத்தகம்? என்று சொன்னால், நேற்று பேசிக் கொண்டிருந்தோமே அல்லது காலையில் பேசிக் கொண்டிருந்தோமே அந்தப் புத்தகம் என்று அர்த்தம். அதாவது ஏதேனும் ஒரு புத்தகத்தைப் பற்றி ஏற்கனவே பேசிக் கொண்டிருந்து மறுபடியும் அதே புத்தகத்தைப் பற்றிப் பேசுவதாக இருந்தால் அல்கிதாப் என்ற வார்த்தையை உபயோகிக்க வேண்டும். முதல் தடவை சொல்லும் போது வெறுமனே கிதாப் என்கிற வார்த்தையை மட்டும் சொன்னால் போதுமானது. இரண்டாம் முறை அதைப் பேசவேண்டுமானால் அல்கிதாப் என்று சொல்ல வேண்டும்.
இப்போது மீண்டும் இந்த வசனத்தில் இறைவன் பயன்படுத்தும் வார்த்தையைப் பிரயோகத்தைப் பாருங்கள். அலா மலக்கைனி என்று இறைவன் சொல்லவில்லை. அலல் மலக்கைனி லி அலா அல்மலக்கைனி என்று இறைவன் பயன்படுத்துகிறான். இப்போது அந்த வசனத்திலுள்ள தனித்தனி வார்த்தைகளின் பொருளை தெரிந்து கொண்டு பிறகு சேர்த்தால் தெளிவாகிவிடும்.
வமா உன்ஸில அருளப்படவில்லை
அலா+அல்+மலக்கைனி = அலல் மலக்கைனி லி அந்த இரு வானவர்கள் மீது
அந்த இரு வானவர்களின் மீது (இந்த ஸிஹ்ர் என்ற சூனியக்கலை) அருளப்படவில்லை என்று அல்லாஹ் சொல்லுகிறான். அந்த இரு வானவர்கள் என்றாலேயே ஏற்கனவே சொல்லப்பட்ட வானவர்களா என்று
அந்த வசனத்திற்கு முன்னால் சென்று பார்க்க வேண்டும். அப்படி முன்னால் சென்று பார்த்தால், இந்த வசனத்திற்கு நான்கைந்து வசனங்களுக்கு முன்னால் ஜிப்ரயீலையும் மீக்காயிலையும் பற்றிப் பேசுகிறான்.
யாரேனும் ஜிப்ரீலுக்கு எதிரியாக இருந்தால் (அது தவறாகும்.) ஏனெனில் அவரே அல்லாஹ்வின் விருப்பப்படி இதை (முஹம்மதே!) உமது உள்ளத்தில் இறக்கினார். இது, தனக்கு முன் சென்றவற்றை உண்மைப்படுத்தக் கூடியதாகவும், நம்பிக்கை கொண்டோருக்கு நேர்வழியாகவும், நற்செய்தியாகவும் உள்ளது என்று கூறுவீராக!
அல்லாஹ்வுக்கும், வானவர்களுக்கும், அவனது தூதர்களுக்கும், ஜிப்ரீலுக்கும், மீகாயீலுக்கும் யார் எதிரியாக இருக்கிறாரோ, அத்தகைய மறுப்போருக்கு அல்லாஹ்வும் எதிரியாக இருக்கிறான்.
(அல்குர்ஆன் 2:97,98)
இந்த வசனங்களுக்குப் பின்னால்தான் ஸிஹ்ர் சம்பந்தமான வசனம் வருகிறது. மேற்சொன்ன வசனங்களில் ஜிப்ரயீல் மீக்காயீல் என்ற இரண்டு வானவர்களைப் பற்றி கூறுவதால், அந்த இரண்டு மலக்குகளுக்கும் சூனியம் இறக்கியருளப்படவில்லை என்ற வாசகம் ஜிப்ரயீலையும் மீக்காயிலையும் தான் குறிக்கிறது.
ஆனால் சிலர், இந்த வசனத்தில் அல்மலக்கைனி என்பது அதற்குப் பின்னால் வருகிற ஹாரூத்,மாரூத் என்ற இரண்டு பேரைத்தான் குறிக்கும் என்று வாதிடுகின்றனர். அப்படி பொருள் செய்ய இலக்கணப்படி இடமிருந்தாலும் இவ்வாறு பொருள் கொள்ளும் போது மலக்குகள் சிஹ்ர் எனும் சூனியத்தைக் கற்றுக் கொடுத்தார்கள் என்ற கருத்து வரும். ஆனால் ஸிஹ்ர் என்பது இறைமறுப்பு என்று சொன்ன இறைவன் அதற்கும் சுலைமான் நபிக்கும் சம்மந்தம் இல்லை என்றும் சொன்ன் இறைவன் அதையே மலக்குகளுடன் சம்மந்தப்படுத்த மாட்டான். இந்த வசனத்தில், சுலைமான் நபிக்கும் சூனியக்கலை என்ற பித்தலாட்டத்திற்கும், ஜிப்ரயீல் மீக்காயீல் என்ற இருவானவர்களுக்கும் இந்தப் பித்தலாட்டத்திற்கும் எந்தச் சம்பந்தமுமில்லை என்று இரண்டு விசயங்களை இறைவன் மறுக்கிறான். எனவே ஷைத்தான் சொன்ன பேச்சைக் கேட்டுக் கொண்டு ஏமாந்து ஸிஹ்ரை நம்பிக் கொண்டு இருக்கிறார்கள் என்று இறைவன் சொல்லுகிறான்.
நபியவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதாக யூதர்கள்தான் சொல்லிலிக் கொண்டிருந்தார்கள் என்று பல்வேறு அறிவிப்புக்களில் ஹதீஸ்கள் வருகிறது. அவைகள் சரியில்லாதவைகள் என்பதைத்தான் இந்த
வசனமும் நமக்குச் சுட்டிக்காட்டுகிறது.
மலக்கு விசயத்தை முடித்ததற்குப் பின்னால், ஷைத்தானைப் பற்றியும் இறைவன் அந்த வசனத்தில் பேசுகிறான். ஹாரூத், மாரூத் என்ற இரண்டு ஷைத்தான்கள்தான் மக்களுக்கு சூனியக்கலையைக் கற்றுக் கொடுத்தனர் என்று இறைவன் சொல்லுகிறான். இந்த வசனத்தில் வருகிற ஷைத்தான்கள் என்றால், நிஜமான உண்மையான ஷைத்தான் இல்லை. மாறாக இதை ஓதினால் இப்படி நடக்கும், அதை ஓதினால் அப்படி நடக்கும் என்று சொல்லிலி மக்களைப் பயங்காட்டுவதற்காக, ஹாரூத், மாரூத் என்ற இரண்டு மனித ஷைத்தான்கள்தான் இந்த சூனியத்தைப் பரப்பினார்கள் என்று அல்லாஹ் சொல்லுகிறான்.
இன்னும் சிலர், ஹாரூத் மாரூத் ஆகிய இருவரும் மலக்குகள்தான் என்ற வாதத்தை வைக்கின்றனர். அப்படியெனில் மலக்குமார்கள் பாவம் செய்வார்கள் என்றாகிவிடுமே? ஆனால், மலக்குமார்கள் இறைவனின் கட்டளைப்பிரகாரம் நடப்பவர்கள், ஒருபாவமும் அறியாதவர்கள் என்று அல்லாஹ் குர்ஆனில் சொல்லிலியிருக்க, அவர்கள் எப்படி இறை மறுப்பான சூனியத்தைக் கற்றுக் கொடுப்பார்கள் என்ற நியாயமான கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டும் என்பதினால், ஹாரூத் மாரூத் ஆகிய இருவரையும் வைத்து மலக்குமார்களாகச் சித்தரித்து ஒருகட்டுக்கதையைப் புனைந்துள்ளனர். .
இவ்வளவு பாவம் செய்கிற மனிதனை ஏன் படைத்தாய்? அவர்கள் உலகத்தை வீணடிக்கிறார்களே! நீ ஏன் அவர்களின் மீது கருணை காட்டுகிறாய்? என்றெல்லாம் மலக்குமார்கள் இறைவனிடம் சவால் விட்டார்களாம். உடனே அல்லாஹ் கேள்விகேட்ட மலக்குமார்களைப் பார்த்து, அவர்களைப் போன்று உங்களைப் படைத்தால், நீங்கள்
அவர்களை விடவும் அதிகமாகத் தவறிழைப்பீர்கள் என்று அல்லாஹ் சொன்னானாம்.
மலக்குமார்களுக்கும் மனிதனுக்குமுள்ள வித்தியாசம் என்னவென்றால், நமக்கு ஆசாபாசங்கள் இருக்கிறது, மலக்குகளுக்கு அது கிடையாது.
அதேபோன்று நமக்கு சுயமாகச் சிந்திக்க ஆற்றலும் சுயமாகச் செயல்படுகிற ஆற்றலும் இருக்கிறது. ஆனால் இது மலக்குமார்களுக்குக் கிடையாது. உதாரணமாக, அல்லாஹ் மலக்குகளைப் பார்த்து குனிந்து நில் என்று கட்டளை போட்டால் உடனே குனிந்து விடுவார்கள். பிறகு அல்லாஹ்வே, நிமிர்ந்து நில் என்று சொல்லும்வரை குனிந்தே நிற்பார்கள். ஒரு இலட்சம் வருசம் வரை வேண்டுமானலும் குனிந்தே நிற்பார்கள். ஆனால் மனிதனிடத்தில் அதே கட்டளையைச் சொன்னால், எவ்வளவு நேரத்திற்கு என்று கேட்போம். அப்படியே குனியும் போது கேட்காவிட்டாலும், குனிந்து சிறிது நேரம் கழித்த பிறகாவது இப்படியே எவ்வளவு  நேரத்திற்கு நிற்க வேண்டுமென்று கேட்டுவிடுவோம். எனவே மலக்குகளைப் பொறுத்தவரை சொன்னவுடனே செய்து விடுவார்கள். மறு பேச்சுக்கோ மறு பரிசீலனைக்கோ இடமே இல்லை. ஆனால் மனிதன் அப்படிப்பட்டவனாக இல்லை என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
சரி! கட்டுக் கதையைத் தொடருவோம். ..தவறிழைப்பீர்கள் என்று
அல்லாஹ் சொன்னானாம்.
அப்படிச் சொல்லிலிவிட்டு, கேள்விகேட்ட மலக்குமார்களுக்கு, நான் உங்களை வேறு மாதிரி படைத்துள்ளேன். உங்களுக்குச் சுயமாக சிந்திப்பதற்கோ முடிவு எடுப்பதற்கோ நல்லது கெட்டதை ஆய்வு செய்து நீங்கள் விரும்புவதைத் தேர்ந்தெடுத்துக் கொள்வது போன்ற சுபாவங்கள் உங்களுக்குக் கிடையாது. நான் எப்படி உங்களைப் படைத்து வைத்திருக்கிறேனோ அப்படியே போய்க்கொண்டிருப்பீர்கள். ஆனால் மனிதனை நான் அப்படியா படைத்துள்ளேன்? அவனுக்கு அறிவு என்று ஒன்றைக் கொடுத்துள்ளேன். அவன் நினைத்தால் நல்வழியிலும் நினைத்தால் தீயவழியிலும் போகலாம் என்கிற மாதிரி படைத்துள்ளேன். இப்படிப் படைத்திருக்கும் போது அவன் தவறுகள் செய்யத்தானே செய்வான் என்று அல்லாஹ் பதில் சொன்னானாம்.
உடனே அந்த மலக்குகள் அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. வேண்டுமானால் மனிதர்களைப் போன்று எங்களுக்கும் ஆசாபாசத்தையும் சிந்திக்கிற ஆற்றலையும் தந்து மனிதர்களின் உலகத்திற்கு அனுப்பிப் பார். நாங்கள் ஒன்றும் கெட்டு விடமாட்டோம் என்று இறைவனிடம் சவால் விட்டார்களாம். உடனே அல்லாஹ், மலக்குமார்களைப் பார்த்து உங்களிலேயே சிறப்புமிக்க இரண்டு மலக்குமார்களை அழைத்து வாருங்கள். அவர்களை சோதனைக்காக
அனுப்பி வைப்போம் என்றானாம். உடனே மலக்குமார்கள் அதிக வணக்கசாலிலியாக இருந்த இந்த ஹாரூத் மாரூத் ஆகிய இருவரையும்
அல்லாஹ்விடம் ஒப்படைத்தார்களாம். உடனே அல்லாஹ். இந்த இரண்டு பேருக்கும் மனிதர்களுக்குள்ள எல்லாத் தன்மைகளையும் கொடுத்து பூமிக்கு அவர்களை அனுப்பிவைத்து விட்டானாம். இவர்கள் வான் உலகத்திலிலிருந்து வந்ததினால் இவர்களுக்கு அங்குள்ள (வானத்தில்) சில விசயங்கள் தெரியுமாம். வானத்திலுள்ள ஸஹ்ரா என்ற நட்சத்திரத்தை அல்லது விடிவெள்ளியைப் பெண்ணாக மாற்றி அவர்களிருவரிடமும் இறைவன் அனுப்பினானாம். அப்பெண்ணைப் பார்த்தவுடன் இவர்கள் இருவருக்கும் ஆசை ஏற்பட்டு அவளை அடைய முற்பட்டார்களாம்,
அப்பெண் அவர்களிடம், என்னை நீங்களிருவரும் அடைய வேண்டுமானால் அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டாளாம். அதற்கு அவர்களிருவரும் அதெல்லாம் முடியவே முடியாது என்று சொல்லிலிவிட்டார்களாம். பிறகு அடுத்த நாள் அந்தப் பெண் ஒரு குழந்தையுடன் சென்றாளாம். அப்போதும் இருவரும் அவளை
அடையவேண்டுமென ஆசைப்பட்டு நெருங்கினார்களாம், அப்பெண் நீங்களிருவரும் இந்தக் குழந்தையைக் கொன்றால் என்னை அடையலாம் என்றாளாம். அதற்கு அவ்விருவரும் நாங்கள் அல்லாஹ்வுக்கு இணையும் கற்பிக்க மாட்டோம், கொலையும் செய்யமாட்டோம் என்றார்களாம். மூன்றாவது நாள் அப்பெண் கையில் மதுக்குவளையுடன் வந்து என்னை அடைய வேண்டுமானல் நீங்கள் இந்த மதுவைக் குடிக்க வேண்டும் என்றாளாம். உடனே இருவரும் மது குடித்தார்களாம். போதை தலைக்கு ஏறியவுடன், அல்லாஹ்வுக்கு இணையும் கற்பித்து, அக்குழந்தையையும் கொன்று, அவளுடன் தவறான பாலிலியல் உறவு கொண்டார்களாம். இதனால்
இறைவன் அவர்களிருவரையும் தண்டிப்பதற்காக அவர்களிடம், உங்களுக்கு மறுமையில் தண்டனை தரட்டுமா? அல்லது இம்மையிலேயே தண்டனை தரட்டுமா என்று கேட்டானாம். அதற்கு அவர்களிருவரும் இந்த உலகத்திலேயே தண்டனையைத் தந்துவிடு அல்லாஹ்வே! என்று சொன்னதினால், அவர்களிருவரையும் தலைகீழாகக் கட்டி ஒருகிணற்றில் தொங்க விட்டு விட்டானாம். இன்றுவரை அவர்கள் கிணற்றில் தொங்கிக் கொண்டிருக்கிறார்களாம். மேலும் இப்படியே கியாம நாள்வரை அந்தக் கிணற்றிலேயே தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருப்பார்களாம்.
இதுதான் ஹாரூத் மாரூத் ஆகிய இருவரையும் பற்றிய கடைந்தெடுத்த கட்டுக்கதை. இந்தக் கதையைத்தான் தப்ஸீர்கள் என்ற பெயரில் சில கிரந்தங்களில் எழுதி வைத்துள்ளனர். அதிலிலிருந்து காப்பியடித்து நம்மிடம் சொல்லுகிறார்கள் இந்த பெயர்தாங்கி ஆலிலிம்கள். இந்தக் கதைக்கு ஏதாவது ஆதாரம் உள்ளதா? நபியவர்கள் இப்படி இந்தச் செய்தியைச் சொன்னதாக அறிவிப்பாளர் தொடர் வரிசையுடன் அறிவிக்கப்பட்டுள்ளதா? ஒன்றுமில்லை. எவனோ ஒருவன் அடித்துவிட்ட இந்தக் கப்ஸாவை வைத்துக் கொண்டு, ஹாரூத் மாரூத் மலக்குகள் என்கின்றனர். ஆனால் உண்மையில் அப்படி இல்லை. இந்தக் கதையில் வருகிறதைப் போன்று நட்சத்திரத்தைப் பெண்ணாக மாற்றுவதெல்லாம் புராணங்களில் உள்ளதைப் போன்று இருக்கிறது. இப்படியெல்லாம் அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டக்கூடாது. அல்லாஹ் களிமண்ணால் மனிதனைத் தனிப் படைப்பாகத்தான் படைத்துள்ளான். மலக்குகளைப் பொறுத்தவரை, அவர்களின் தன்மைகளை மாற்றி அல்லாஹ் அனுப்ப மாட்டான்.  இறைவனால் மாற்றமுடியாது என்பதற்காகச் சொல்ல வரவில்லை. மாறாக இறைவன் அப்படி செய்தமாதிரி ஒருஆதாரப் பூர்வமான செய்தியும் இல்லை.
மேலும் நபியவர்கள் பிரச்சாரம் செய்த சமூக மக்கள், மலக்குமார்களை அல்லாஹ் தூதராக அனுப்ப வேண்டியதுதானே என்றெல்லாம் கேட்டுப் பார்த்தார்கள். அதற்கு அல்லாஹ் அப்படி மலக்குமார்களைத் தூதராக அனுப்ப மாட்டான் என்று பதில் சொல்லச் சொல்லுகிறான். இந்தச் செய்தியை மறைகூறும் இறைத்தூதர்கள் என்ற தலைப்பில் நபிமார்களின் இலக்கணத்தில் விரிவாகப் விளக்கியுள்ளோம்.
எனவே மேற்சொன்ன கதை கட்டுக்கதை. ஹாரூத் மாரூத் என்பவர்கள் மலக்குமார்களாக இல்லை. ஹாரூத் மாரூத் என்ற இரண்டு மனிதர்கள் இருந்தார்கள். அவர்கள் சில தந்திரங்களைத் தெரிந்து வைத்துக் கொண்டு, அந்த வித்தையைப் பிறமக்களுக்குச் சொல்லிலிக் கொடுத்தார்கள் என்பது மேற்சொன்ன வசனத்திற்கு அர்த்தமாகும்.
பி பாபில ஹாரூத வமாரூத் லி பாபில் என்ற நகரத்தில் இரண்டு ஷைத்தான்கள் தான் சூனியத்தைக் கற்றுக் கொடுத்தார்கள் என்று சொல்லுகிறான். இதன்மூலம் மலக்குமார்களுக்கும் சூனியத்திற்கும் சம்பந்தமில்லை என்றும், அது இறைவன் புறத்திலுள்ளது இல்லை என்பதையும் இறைவன் மறுத்து விடுகிறான். மக்களை ஏமாற்றுவதற்காக இவர்களால் உருவாக்கப்பட்டது என்பதையும் சொல்லிலி இந்த வசனத்தைத் துவக்குகிறான்.
وَمَا يُعَلِّمَانِ مِنْ أَحَدٍ حَتَّى يَقُولَا إِنَّمَا نَحْنُ فِتْنَةٌ லி நாங்கள் சோதனையாக இருக்கிறோம். எனவே எங்களை மறுத்து விடாதீர்கள் என்று சொல்லாமல் எவருக்கும் அவர்களிருவரும் (சூனியத்தைக்) கற்றுக் கொடுப்பதில்லை.
எனவே எவர்களுக்கு சூனியத்தைக் கற்றுக் கொடுத்தாலும், நாங்கள் சோதனையாக இருக்கிறோம் என்பதைச் சொல்லிலி பயமுறுத்தித்தான் கற்றுக் கொடுப்பார்கள் என்று அல்லாஹ் சொல்லுகிறான். இப்படித்தான் ஒவ்வொரு வித்தைக்காரனும், இது பயங்கரமான விசயம். ஒரு வார்த்தையை மாற்றிச் சொன்னால் உன்னையே மாற்றி அடித்துவிடும் என்றெல்லாம் மக்களிடத்தில் எதையாவது ஒன்றைச் சொல்லிலி பயமுறுத்துவார்கள். இதுபோன்று தான் அந்தக் காலத்திலிலிருந்து இந்தக் காலம் வரை சூனியம் செய்பவர்கள் மக்களைப் பயமுறுத்தியும் வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அல்லாஹ் நமக்குத் தெளிவுபடுத்துகிறான். அதற்கடுத்ததாக,
فَيَتَعَلَّمُونَ مِنْهُمَا مَا يُفَرِّقُونَ بِهِ بَيْنَ الْمَرْءِ وَزَوْجِهِ லி (இதன் மூலம்) ஒரு கணவனுக்கும் மனைவிக்கும் மத்தியில் எவ்வாறு பிரிப்பது என்பதை அவர்களிருவரிடமிருந்தும் கற்றுக் கொண்டார்கள்.
என்று அல்லாஹ் கூறுகிறான்.
கணவன் மனைவிக்கு மத்தியில் பிரிப்பதைத்தான் இந்த சூனியத்தின் மூலம் செய்யமுடியும் என்பதைத் தெளிவுபடுத்திவிட்டு, அடுத்ததாக,
وَمَا هُمْ بِضَارِّينَ بِهِ مِنْ أَحَدٍ إِلَّا بِإِذْنِ اللَّهِ அல்லாஹ்வின் அனுமதியில்லாமல் இவர்களால் யாருக்கும் எந்தத் தீங்கையும் செய்யமுடியாது. என்று
அழுத்தம் திருத்தமாகச் சொல்லிலிக்காட்டுகிறான்.
அல்லாஹ்வின் அனுமதி என்றால், விதியில் இருந்தாலே தவிர எவர்களுக்கும் எந்தத் தீங்கும் செய்யவே முடியாது என்று சொல்லு கிறான்.
இப்படி இறைவன் சொல்வதின் மூலம், சூனியம் என்பது வெறுமனே பொய் என்று உறுதியாகி விடுகிறது. ஆனால் சூனியத்தின் மூலம் கணவன் மனைவிக்கு மத்தியில் பிரிவினை ஏற்படுத்திவிடலாம், மாயமந்திரத்தின் மூலம் வஸியம் செய்துவிடலாம் என்று நினைத்தே அதைக் கற்றுக் கொள்கின்றனர். ஆனால் அல்லாஹ்வின் நாட்டம் இருந்தாலே தவிர எந்த ஒன்றையும் இவர்களால் செய்யவே முடியாது என்பதை இறைவன் தெள்ளத்தெளிவாக விளக்கி விட்டான்.
அப்படியெனில் இறைவனால் ஏற்படுத்தப்பட்ட விதியின் மூலம் உண்மையிலேயே கணவன் மனைவி பிரிவதை சிலர் சூனியத்தின் மூலம் நடந்ததாக நம்பிக் கொண்டு சூனியம் இருப்பது உண்மை என்று வாதிடுகிறார்கள். இதனால் ஏதாவது செய்யமுடியுமா? என்றால் முடியவே முடியாது என்று அல்லாஹ் சொல்லுகிறான். அதற்கடுத்தாக
وَيَتَعَلَّمُونَ مَا يَضُرُّهُمْ وَلَا يَنفَعُهُمْ  மேலும் தங்களுக்கு எந்தத் தீங்கும் நன்மையும் செய்து கொள்ள முடியாததைக் கற்றுக் கொள்கிறார்கள்.
இப்படி சூனியத்தை வைத்து பிறருக்கு எந்தத் தீங்கையும் ஏற்படுத்திட முடியாது என்பதோடு இதனைக் கற்றுக் கொள்பவர்களுக்குத்தான் இது கேடானது என்றும் சொல்லுகிறான். இதனால் எந்த நன்மையும் இல்லை என்றும் சொல்லுகிறான்.
இந்த வசனத்தில் சூனியம் இறைவனிடத்திலிருந்து வந்தது என்பதையும் மறுக்கிறான். சூனியத்திற்கும் சுலைமான் நபிக்கும், சூனியத்திற்கும் மலக்குமார்களுக்கும் சம்பந்தம் இருக்கிறது என்பதையும் மறுக்கிறான். மேலும் இந்த சூனியத்தின் மூலம் எந்த ஒன்றையும் செய்யமுடியாது என்று சொல்லிலி சூனியத்தையும் மறுக்கிறான். இந்த சூனியத்தின் மூலம் எவரது கைகால்களையாவது முடக்கமுடியுமா? ஒருவரை மெண்டலாக்க முடியுமா? ஒருவருக்குப் பிள்ளை இல்லாமல் ஆக்கிவிட முடியுமா? ஒருவரை நோயாளியாக ஆக்கிவிட முடியுமா? ஒன்றுமே முடியாது என்கிறான் அல்லாஹ். அல்லாஹ் தனது விதியில் ஏதேனும் தீங்கு நேரவேண்டும் என எழுதியிருந்தால் மட்டுமே தீங்கு ஏற்படும். ஆனால்
சூனியத்தின் மூலம் ஒருவருக்குக்கூட எந்தத் தீங்கும் ஏற்படாது.
இந்த வசனத்தில் சூனியத்தின் மூலம் ஒருவருக்குக்கூட கேடு செய்ய முடியாது என்று இறைவன் சொன்ன வார்த்தை என்னையும், உங்களையும், ஏன் உலகத்தில் இருக்கிற எல்லோரையும் குறிக்கும். அற்பத்திலும் அற்பமானவர்களையெல்லாம் அது குறிக்கும். அதுவும் ஈமான் கொள்ளாத மனிதர்களையும் குறிக்கும். அப்படியிருக்கும் போது, நபிகள் நாயகம் அவர்கள் அந்த வார்த்தையினுள் வரமாட்டார்களா? எவருக்கும் என்ற வார்த்தைப் பிரயோகம் நபியவர்களையும் சேர்த்துத்தான் குறிக்கிறது. இந்தச் சாதாரண அறிவுகூட சூனியத்தை ஆதரிப்பவர்களுக்கு இல்லையே!
நபிகள் நாயகத்திற்கு சூனியம் வைக்கப்பட்ட செய்தியை ஆராய்ந்து பார்த்தால், நபியவர்கள் பல நாட்கள் மறதியாளராக இருந்ததாகவும், தான் செய்த காரியத்தைச் செய்யவில்லை என்றும் சொல்லிலியதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் நபியவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டு மதியிழந்தவர்களாக நபிகளாரைச் சித்தரிக்கப் பார்க்கிறார்கள். இதனை ஒருக்காலும் ஏற்றுக் கொள்ளவே முடியாது. எனவே முஹம்மது நபியவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதாக வருகிற செய்திகள் அல்குர்ஆனின் 2:102 ஆகிய இந்த வசனத்துடன் நேரடியாக மோதுகிறது.
وَلَقَدْ عَلِمُوا لَمَنْ اشْتَرَاهُ مَا لَهُ فِي الْآخِرَةِ مِنْ خَلَاقٍ இதை (சூனியத்தை) விலைக்கு வாங்கியோருக்கு மறுமையில் எந்தப் பாக்கியமும் இல்லை> என்பதை உறுதியாக அவர்கள் அறிந்து வைத்துள்ளனர்.
وَلَبِئْسَ مَا شَرَوْا بِهِ أَنفُسَهُمْ لَوْ كَانُوا يَعْلَمُونَ லி தங்களை எதற்காக விற்றார்களோ அது மிகவும் கெட்டது. அவர்கள் அறிய வேண்டாமா?
இந்த வசனத்தில் அவர்கள் அறிந்து வைத்துள்ளார்கள் என்றால்,
அவர்கள் என்பது யூதர்களைக் குறிப்பதாகும்.
இந்த வசனத்தில் இறைவன் சொல்வது இதுதான். ஸிஹ்ர் லி சூனியம் என்பது பெரும்பாவம். இந்தப் பாவத்தை எந்த நபியும் செய்ய மாட்டார்கள் என்றும் வானவர்களும் சூனியம் என்ற பெரும்பாவத்தைட் செய்ய மாட்டார்கள். மூன்றாவதாக, ஸிஹ்ர் லி சூனியத்தினால் யாருக்கும் எதனையும் செய்யவே முடியாது என்றும் சொல்லுகிறான். அது பொய் என்றும் உறுதிப்படுத்துகிறான். நான்காவது, யார் இதனை நம்புகிறாரோ செய்கிறாரோ அவரது மறுமை வாழ்க்கையும் நாசமாகிவிடும் என்றும் அல்லாஹ் சொல்லுகிறான்.
அப்படியெனில், இன்று வாழக்கூடிய ஆலிம்களில் அதிகமானவர்கள் சூனியத்தை உண்மையென்றும், அது வைக்கப்பட்டால் முட்டையை ஓதிவைக்க வேண்டும், வெற்றிலையில் எழுதிக் குடிக்க வேண்டும்,
அந்தப் பரிகாரம் இந்தப் பரிகாரம் என்றெல்லாம் பொய்புரட்டுகளைச் சொல்லிலி மக்களை ஏமாற்றுபவர்களின் மறுமை வாழ்க்கை பாழாகிவிடும் என்பதில் எள்முனையளவும் சந்தேகமில்லை என்பதை உணர வேண்டும்.
எனவே மாயமந்திரம், சூனியம், தாயத்து, தல்ஸமாத் போன்றவைகள் எதுவுமே இஸ்லாத்தில் இல்லை என்பதை இதிலிருந்து விளங்கிக் கொள்ள வேண்டும்.
மேலும் உங்களால் சூனியத்தினால் ஏதாவது செய்ய முடியும் என்றால், எனக்கு எனது கால்கைகளை சூனியத்தினால் முறித்துப் பாருங்கள் என்று கடந்த 30 வருடங்களாக் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். சூனியம் உண்மை என்பவர்களால் ஒன்றுமே செய்ய முடியவில்லை என்பதைக் கண்கூடாகப் பார்க்கத்தானே செய்கிறோம். இப்போதும் சவால் விடுகிறோம். எனக்குச் செய்வினை வைப்பதற்கு எனக்குச் சொந்தமான எனது தலைமுடி, காலடிமண், சட்டை, வியர்வை சம்பந்தமான….. இப்படி எதை வேண்டுமானாலும் தருகிறேன். உங்களால் எனக்குச் செய்வினை மூலம் ஏதேனும் ஒன்றை செய்து காட்ட முடியுமா?
மத்ஹப்வாதிகளின் பார்வையில் நாம் அவர்களின் எதிரிகளாக இருக்கிறோம். ஏன் எங்களை உங்களது சூனியத்தினால் முறியடிக்க முடியவில்லை. ஏனென்றால் அது பொய் என்று நாங்கள் நம்புகிறோம். எவர்கள் அதனை நம்பி ஏமாளிகளாக இருக்கிறார்களோ அல்லது பயந்து கொண்டிருக்கிறார்களோ, இல்லாததை இருப்பதாக வஸ்வாஸை ஏற்றுக் கொண்டுள்ளார்களோ அவர்களைத் தான் சூனியத்தை வைத்து பயங்காட்ட முடியும் என்பதையும் கண்கூடாகப் பார்த்து வருகிறோம்.
இன்னும், நபியவர்கள் மக்காவிலிலிருந்து மதினாவுக்கு ஹிஜ்ரத் செய்து போனபோது மதினாவில் யூதர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. அவர்களிடமே ஆதிக்கம் இருந்தது. அதன் பிறகு, நபியவர்களை இறுதித் தூதராக ஏற்றுக் கொள்ள ஆரம்பித்து, சிறிது  நாட்களிலேயே இஸ்லாமியர்கள் அதிகமாகி நபியவர்களிடம் ஆட்சிப் பொறுப்பு வந்தது. இஸ்லாமிய ஆட்சியிலிலிருந்த சிறிய தொகை யூதர்கள், முஸ்லிலிம்கள் மீது பொறாமை கொண்டு முஸ்லிலிம்கள் அனைவருக்கும் சூனியம் வைத்துவிட்டோம். இனிமேல் ஒருவருக்கும் பிள்ளை பிறக்காது என்று பயங்காட்டினார்கள். இப்படியெல்லாம் வெற்று வாய்வார்த்தைகளில் மிரட்டினார்கள். இப்போதும் சூனியம் செய்பவர்கள் மக்களைப் பயங்காட்டுவதற்கு, இரத்தம் கக்கி இறப்பாய் என்றும் இப்படி எதாவது ஒன்றைச் சொல்லுவார்கள். அப்படியெல்லாம் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. அது நடக்காவிட்டாலும், அவர்கள் சொல்லுகிற வேகத்தைப் பார்த்ததும் நமக்கெல்லாம் பயம் வரத்தான் செய்யும். இப்படித்தான் குரளி வித்தை காட்டுவார்கள். நமது சமுதாயத்திலும்கூட இதுபோன்று மக்களை பயங்காட்டுகிற வேலையைச் செய்யும் பெயர்தாங்கி ஆலிலிம்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
தாயத்து வாங்காமல் போனாய் என்றால் உன்னை இரத்தம் கக்க வைத்து சாகடித்து விடுவேன் என்று பயம் காட்டுவார்கள். இதைத் தாண்டி காலடி எடுத்து வைத்தாய் என்றால் அப்புறம் நடப்பதற்கு நான் பொறுப்பு இல்லை என்றெல்லாôம் பயங்காட்டும்போது நாம் பயப்படத்தான் செய்கிறோம். இதுபோன்றே ஸஹாபாக்களையும் அன்றைய காலத்து யூதர்கள் பயங்காட்டியதினால், நமக்கெல்லாம் சூனியம் வைத்துவிட்டர்களாமே! இதுவரைக்கும் பிள்ளைகள் பிறந்ததோடு சரி. இனிமேல் நம்மில் யாருக்குமே பிள்ளையே பிறக்காமல் போய்விடுமாமே? என்றெல்லாம் ஸஹாபாக்கள் பயந்தும் இருக்கிறார்கள். அதற்கான ஆதாரத்தை புகாரியில் பார்க்கலாம்.
மக்காவில் (என் புதல்வர்) அப்துல்லாஹ் பின் ஸுபைரை நான் கருவுற்றேன். கர்ப்ப காலம் முழுமையடைந்துவிட்ட நிலையில் புறப்பட்டு நான் மதீனா சென்றேன். (வழியில்) குபாவில் தங்கினேன். குபாவிலேயே எனக்குப்  பிரசவமாகிவிட்டது. பிறகு குழந்தையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டு சென்று அவர்களுடைய மடியில் வைத்தேன். பிறகு நபி (ஸல்) அவர்கள் ஒரு பேரீச்சம் பழத்தைக் கொண்டுவரச் சொல்லி, அதை மென்று குழந்தையின் வாயில் உமிழ்ந்தார்கள். அப்துல்லாஹ்வின் வயிற்றுக்குள் சென்ற முதல் (உணவுப்) பொருள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கüன் உமிழ்நீராகத்தான் இருந்தது. பிறகு, அவர்கள் பேரீச்சம் பழத்தை மென்று அப்துல்லாஹ்வின் வாயில் அதை இட்டார்கள். பின்னர், அப்துல்லாஹ்வுக்கு சுபிட்சம் (பரக்கத்) வேண்டிப் பிரார்த்தனை செய்தார்கள். (என் புதல்வர்) அப்துல்லாஹ்தான் இஸ்லாத்தில் பிறந்த முதல் குழந்தையாவார். ஆகவே, முஸ்லிலிம்கள் அவர் பிறந்ததற்காக மிகவும் மகிழ்ச்சியடைந்தார்கள். ஏனெனில்,
அவர்கüடம், யூதர்கள் உங்களுக்கு சூனியம் வைத்து விட்டார்கள். ஆகவே, உங்களுக்கு (இனி) குழந்தை பிறக்காது எனக் கூறப்பட்டுவந்தது.
அறிவிப்பவர்: அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலிலி), நூல்: புகாரி 5469
யூதர்கள் முஸ்லிலிம்களுக்குச் சூனியம் வைத்துவிட்டதால் இனிமேல் முஸ்லிம்களுக்குப் பிள்ளை பிறக்காது என்று மக்களுக்கு மத்தியில் பரப்பிக் கொண்டிருந்த போதுதான், அஸ்மா (ரலிலி) அவர்கள் அப்துல்லாஹ் பின் ஸுபைரைப் பெற்றெடுத்தார்கள். பொதுவாக ஒருவருக்குக் குழந்தை பிறந்தால் அந்தக் குழந்தையின் தாய் தந்தையருக்குத்தான் பெருமகிழ்ச்சி, பிறகு அந்தக் குடும்பத்திற்கே மகிழ்ச்சி என்றும் சொல்லலாம். ஆனால் ஒரு ஊரைச் சார்ந்த மக்கள் அனைவரும் சந்தோசப்பட முடியுமா? என்றால் முடியாது. ஆனால்  இந்தச் செய்தியை உன்னிப்பாகப் பார்க்கும் போது, மதினாவிலுள்ள எல்லா முஸ்லிலிம்களும் சந்தோசப்பட்டார்கள் என்று வருகிறது. ஏனெனில், யூதர்கள் யாருக்கும் குழந்தை பிறக்காது என்று சொல்லிலிக் கொண்டிருந்ததை அஸ்மா அவர்கள் குழந்தை பெற்ற செய்தி யூதர்களுக்குச் சரியான மூக்கறுப்பாக ஆக்கிவிட்டது. அதுபோக முஸ்லிம்களுக்கு சூனியத்தின் மூலம் ஒன்றும் செய்யவே முடியாது என்ற நம்பிக்கை வலுப்பெற்றதை கண்கூடாக்க் காணமுடிந்தது.
இதில் யூதர்கள் சொன்னதைப் போன்று பிள்ளை பிறக்காமல் இருந்திருக்க வேண்டும். ஆனால் எந்த மந்திரமும் மாயமும் செய்யாமல் இறைவனால் பிள்ளை கொடுக்கப்பட்டு, பிள்ளைகளும் பிறந்து கொண்டுதான் இருந்தது என்பதை மேற்சொன்ன சம்பவத்தில் விளங்கிக் கொள்ள முடியும். எனவே ஸிஹ்ர் லி சூனியம் என்பதெல்லாம் வெறுமனே பித்தலாட்டம்தானே தவிர அதை வைத்து ஒன்றும் செய்ய முடியாது என்பதையும் சேர்த்து விளங்கிக் கொள்ளவேண்டும். இது முக்கியமான விசயம்தான்.
அடுத்ததாக, ஸிஹ்ர்லிசூனியம் செய்யும் மார்க்க அறிஞர்களுக்கு ஒரு விசயத்தைச் சொல்லிலிக் கொள்கிறோம். சூனியம் என்பது பெரும்பாவம் ஆகும். அதுவும் இறைமறுப்பு எனும் குஃப்ர் என்ற பாவத்தில் சேர்த்துவிடுகிற குற்றமாகும்.
அழித்தொழிக்கும் ஏழு பெரும் பாவங்களைத் தவிருங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், அல்லாஹ்வின் தூதரே! அவை எவை? என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதும், சூனியம் செய்வதும், நியாயமின்றி கொல்லக் கூடாது என்று அல்லாஹ் புனிதப்படுத்தியுள்ள உயிரைக் கொல்வதும், வட்டி உண்பதும், அனாதைகüன் செல்வத்தை உண்பதும், போரின் போது புறமுதுகிட்டு ஓடுவதும் அப்பாவிகளான, இறை நம்பிக்கை கொண்ட, கற்புள்ள பெண்கüன் மீது அவதூறு கூறுவதும் தான் (அந்தப் பெரும் பாவங்கள்) என்று (பதில்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலிலி), நூல்கள்: புகாரி 2766, முஸ்லிலிம் 451
மக்களின் உள்ளத்தில் ஈடுபாடாக பதியவைப்பதற்காக நபியவர்கள் கேள்வியைக் கேட்டு பதில் சொல்லுவார்கள். இப்படிப் பேசுவதும் நபியவர்களின் நடைமுறையில் உள்ளதாகும். முதலாவது விலகிக் கொள்ளவேண்டிய பாவம், அல்லாஹ்வுக்கு இணைவைப்பது, இரண்டாவதாக விலகிக் கொள்ள வேண்டிய பாவம் ஸிஹ்ர்லிசூனியம். விலகிக் கொள்வது என்றால், அதைச் செய்யவும் கூடாது, நம்பவும் கூடாது என்பதாகும்.
ஒன்றிலிருலிருந்து விலகுதல் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. ஒன்றை செய்வது கூடாது என்றால் அதைச் செய்வதற்குக் கொடுக்கவும் கூடாது என்றுதானே பொருள். வட்டி வாங்குவது கூடாது என்றால் வட்டிக்குக் கொடுப்பதுவும் கூடாதுதான். பச்சை குத்தக்கூடாது என்றால் பச்சை குத்துவதற்குக் கொடுக்கவும் கூடாதுதான். ஜோதிடம் பார்ப்பது கூடாது என்றால் அவனிடம் போய் கையை நீட்டவும் கூடாது என்றுதான் புரிந்து கொள்ள வேண்டும். அப்படியெனில் சூனியத்திலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள் என்றாலே வாயை மூடிக்கொள்ள வேண்டியதுதான். ஆனால் இன்று மக்கள் அப்படியில்லை. அதனால்தான் நபியவர்கள் இணைவைத்தலுக்கு அடுத்தபடியாக இதனை எச்சரிக்கிறார்கள்.
இன்னொரு இடத்தில் இரண்டு பாவங்களை மட்டும் குறிப்பிட்டு நபியவர்கள் சொல்லும் போது இணைவைத்தலையும் சூனியத்தையும் மட்டுமே முக்கியத்துவப்படுத்தி சொன்னார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பேரழிவை உண்டாக்கும் பெரும்பாவங்களைத் தவிர்த்துவிடுங்கள். (இறைவனுக்கு) இணைவைப்பதும் சூனியம் செய்வதும் அவற்றில் அடங்கும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலிலி),  நூல்: புகாரி 5764
அப்படியெனில் மார்க்கத்தில் இவ்வளவு பெரிய பயங்கரமான குற்றம் என்று சொல்லிலித்தரப்பட்ட விசயத்தில் மார்க்க அறிஞர்கள் என்ற போர்வையில் இருந்து கொண்டு மக்களை வழிகெடுக்கின்றனர். அறியாத மக்கள் வயிற்று வலிலிக்காகவும் காய்ச்சலுக்காகவும் ஏதேனும் ஒரு பிரச்சினைக்கு மார்க்க அறிஞர்களிடத்தில் வரும்போது
அவர்களிடத்தில் மார்க்கத்தை எடுத்துச் சொல்லாமல், உனக்கு அவர் சூனியம் வைத்துவிட்டார் இவர் சூனியம் வைத்துவிட்டார் என்றெல்லாம் இல்லாத சூனியத்தை வைத்து மக்களை பயங்காட்டி ஏமாற்றி, அண்ணன் தம்பிக்குள் சண்டையை மூட்டிவிடுவது, சம்பந்தம் செய்த குடும்பங்களிலும் சண்டையை மூட்டிவிட்டு குடும்பங்களை சூனியத்தின் பெயரால் பிரிப்பதை கண்கூடாகப் பார்க்கிறோம்.
கணவன் மனைவிக்குள் ஏதாவது பிரச்சினைகள் நடப்பது என்பது எல்லோரின் குடும்பங்களிலும் உள்ளதுதான். இது அதிசயம் ஒன்றுமில்லை. இரண்டு மனிதர்களின் உள்ளங்கள் எல்லாவற்றிலும் ஒத்துப் போவது என்பது எந்தக் காலத்திலும் முடியாது. ஏனெனில் எந்த இரண்டு மனிதர்களும் ஒரே மாதிரி எல்லா விசயத்திலும் முடிவெடுக்க மாட்டார்கள். அண்ணன் தம்பியாக இருந்தாலும் தகப்பனும் பிள்ளையுமாக இருந்தாலும் சரியே. அது போன்று கணவன் மனைவிக்கும் அப்படித்தான். விதிவிலக்கெல்லாம் ஒன்றுமில்லை. எப்படி முடிவெடுத்தாலும் ஒருவரின் கருத்து ஒருநேரம் மிகைத்தும் ஒருவரின் கருத்து சிலநேரம் மிகைக்காமலும் இருக்கத்தான் செய்யும் என்கிற இந்த சாதாரண விசயத்தைக்கூட புரிந்து கொள்ளாத சிலர், சூனியத்தை வைத்து ஏமாற்றி பிழைப்பு நடத்துகிற இந்த மோசடிக்காரர்களிடம் வசமாக மாட்டிக் கொள்கிறார்கள்.
மனைவி, கணவன் என்னைச் சரியாகக் கவனிக்காமல் இருக்கிறார் என்றும் கணவன் மனைவியைப் பற்றி மனைவி எனக்குக் கீழ்படிந்து நடக்காமல் இருக்கிறாள் என்றும் குறை சொல்லுவார்கள். உடனே அந்தப் பெண்மணியிடம் உனக்கு மாமியார் வீட்டில் சூனியம் வைத்திருக்கிறார்கள் என்று இல்லாத சண்டையை மூட்டிவிட்டு பெரியளவுக்கு குடும்பங்களில் பிரிவினையை உண்டுபண்ணி விடுவார்கள்.
நாம் நன்றாக சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஒரு பேச்சுக்காக சூனியம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். நபியவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதாக வரக்கூடிய செய்திகள் குர்ஆனுக்கு நேரடியாக மோதுவதால் அவை பலவீனமான செய்தி என்று சொல்லிலி நாம் அந்தச் செய்திகளை மறுக்கிறோம். இருந்தாலும் ஒரு வாதத்திற்காக நபியவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதாக அவர்கள் சொல்லுவதைப் போன்று வைத்துக் கொள்வோம். நபியவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டது என்பதை அந்த ஹதீஸில் உள்ளபடி எப்படி அறிந்து கொண்டார்கள்.
அந்த ஹதீஸில் நபியவர்களின் தலைமாட்டிலும் கால்மாட்டிலும் இரண்டு மலக்குமார்கள் அமர்ந்து கொண்டு பேசியபோதுதான் நபியவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்ட செய்தியைக் கூறுகின்றனர். அதன்படி ஆராய்ந்தால், ஒரு மனிதனுக்கு சூனியம் வைக்கபட்டிருக்கிறது என்கிற செய்தி இறைவனால் மலக்குமார்களின் மூலமாகத்தான் அறிவிக்கப்பட்டது என்பதை அறிவுடைய யாரும் ஏற்றுக் கொள்வார்கள். மறுக்க மாட்டார்கள்.
விசயம் இவ்வாறு இருக்க, இன்று சமுதாயத்தில் மதரஸாக்களில் ஏழுவருடம் படித்து பட்டம் பெற்ற போலிலித்தனமான உலமாக்கள் என்ற பெயரில் இருந்து கொண்டு, வயிற்றுவலிலிக்காக வருகிற நபரிடம் சூனியம் வைக்கப்பட்டிருக்கிறது என்று எப்படிச் சொல்லமுடியும்?. மலக்கு வந்தல்லவா சூனியம் வைக்கப்பட்ட செய்தியை அவருக்குச் சொல்ல வேண்டும். நபியவர்களுக்கு வைக்கப்பட்ட சூனியத்தையே நபியவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லையே!. தனக்கு என்ன நடக்கிறது என்பதே நபியவர்களுக்குத் தெரியாமல் குழம்பி இருந்ததாகத்தான் சூனியம் வைக்கப்பட்டதாக வருகிற செய்திகளில் உள்ளது.
முதலிலில் அந்தச் செய்தி சரியில்லை என்பதுதான் உண்மை. இருப்பினும்
அதைச் சரியென்று வைத்துக் கொண்டு பேசினாலும், அந்தச் செய்திகளில் உள்ள தகவல்களை நன்றாக ஆராய்ந்து பார்க்கும் போது, ஐம்பது நாட்களாக எனக்கு என்ன நடக்கிறது என்று என்னால் ஒன்றுமே சொல்ல முடியவில்லை என்றும் எனக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது என்றெல்லாம் நபியவர்கள் சொன்னதாகவும் அதில் இருக்கிறது. பிறகு தான் இரண்டு வானவர்களில் ஒருவர் நபியவர்களின் தலைமாட்டிலும் இன்னொருவர் கால்மாட்டிலும் உட்கார்ந்து கொண்டு பேசியதின் மூலம் தனக்கு சூனியம் வைக்கப்பட்டது நபியவர்களுக்குத் தெரிகிறது என்று பதிவாகியுள்ளது. வஹீயின் மூலமாக அல்லாஹ்வோடு தொடர்பு வைத்துக் கொண்டுள்ள நபியவர்களுக்கே தனக்கு சூனியம் வைக்கப்பட்ட செய்தியை அறிந்து கொள்ள முடியவில்லை என்பதுதான் உண்மையிலும் உண்மை. நபிக்கு சூனியம் வைக்கப்பட்டதாக வானவர்கள் சொன்ன பிறகுதான் நபியவர்களுக்கே சூனியம் வைக்கப்பட்டதென அறிந்து கொண்டார்கள் என்றால் இன்று மந்திரவாதி என்பவர்கள் எப்படி ஒருமனிதனுக்கு சூனியம் வைக்கப்பட்டதை கண்டுபிடித்தார்கள். அதுவும் இவர்தான் வைத்தார்கள் என்று எப்படி கண்டுபிடித்தார்கள்.
லபீத் இப்னு அஃஸம் என்பவன்தான், இந்தக் கிணற்றில்தான் நபியவர்களுக்கு சூனியம் வைத்தான் என்பதையும் அல்லாஹ்வின் புறத்திலிருந்தே நபியவர்களுக்குச் சொல்லப்படுகிறது என்பதை ஆராயும் போது அந்த ஹதீஸ்கள் சரியென்று வைத்துக் கொண்டாலும் இவர்கள் செய்கிற பித்தலாட்டத்திற்கு ஆதாரம் அதில் இல்லவே இல்லை. இதற்கு இப்படியெல்லாம் விளக்குவது, ஹதீஸை சரியென்று நம்புபவர்களுக்குத்தான் சொல்லுகிறோமே தவிர இந்த பிராடுகளுக்கு அதில் எந்த ஆதாரமும் இல்லை என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
அடுத்து, நபிமார்களைப் பொறுத்த அளவில் அவர்களுக்கு இறைவன் புறத்திலிலிருந்து மலக்குமார்களின் மூலமாக வஹீ வருவதால் அவர்களுக்கு தெரிகிற வாய்ப்பை அல்லாஹ் ஏற்படுத்துவான் என்றாவது நம்பலாம். ஆனால் நபிமார்கள் அல்லாத நம்மைப் போன்ற மற்ற மனிதர்களுக்கு இறைவன் புறத்திலிருந்து வஹீ எதுவும் வராது என்பதினால் அதைத் தெரிந்து கொள்ளவே முடியாது. எனவே அல்லாஹ்விடம் பொதுவாக பிரார்த்தனை செய்துவிட்டுப் போவதுதான் சரியான வழிமுறையாகும்.
அதனால் இந்த ஸிஹ்ர்லிசூனியத்தை வைத்துக் கொண்டு வஸியம் பண்ணி விட்டார்கள், அதுபண்ணி விட்டார்கள் இது பண்ணி விட்டார்கள், மருந்து கொடுத்து விட்டார்கள், முகம்மாத்து பண்ணிவிட்டார்கள் என்றெல்லாம் சொல்லி ஏமாற்றுவதை நாம் நம்பக்கூடாது என்பதற்காகத்தான் இதை சொல்லுகிறோம்.
http://www.sltjweb.com/2012/05/24/harooth-marooth-enbor-vanawargala/

Wednesday, May 23, 2012

தொப்பியும் தலைப்பாகையும் இஸ்லாமிய ஆடைகளா?


பி. ஜைனுல் ஆபிதீன்
தொழுகையின் போதோ, தொழுகைக்கு வெளியிலோ தொப்பி அணிய வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரேயொரு ஹதீஸ் கூட இல்லை.
தொப்பி அணிவது தான் இஸ்லாத்தின் சின்னம் என்றிருந்தால் அது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வலியுறுத்தாமல் இருந்திருக்க மாட்டார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வாழ்நாளில் தொப்பி அணிந்ததற்கு ஆதாரம் உள்ளதா என்றால் அதுவுமில்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொப்பி அணிந்ததாக ஒரேயொரு பலவீனமான ஹதீஸ் தான் உள்ளது. அதுவும் கூட சந்தேகத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகளால் தான் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஹதீஸ் இது தான்.
….அல்லாஹ்வின் பாதையில் உயிர் தியாகம் செய்தவருக்கு கியாமத் நாளில் கிடைக்கும் பதவிகளை மக்கள் தம் தலைகளை உயர்த்தி (அண்ணாந்து) பார்ப்பார்கள்” என்று கூறிய அவர்கள் தமது தலையை உயர்த்திக் காட்டினார்கள். அப்போது அவர்களின் தொப்பி கீழே விழுந்தது… அவர்களின் தொப்பி என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தொப்பியா? அல்லது உமர் (ரலி) அவர்களின் தொப்பியா? என்பது எனக்குத் தெரியவில்லை என்று அறிவிப்பாளர் ஐயத்திற்கிடமான வார்த்தைகளால் அறிவித்துள்ளார்.
திர்மிதீ 1568, அஹ்மத் 145 ஆகிய நூற்களில் இது பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூயஸீத் அல்கவ்லானி என்பார் யாரென அறியப்படாதவர் ஆவார். மேலும் இப்னு லஹ்யஆ என்ற அறிவிப்பாளரும் இதில் இடம் பெறுகின்றார். இவர் பலவீனமானவர் ஆவார்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொப்பி அணிந்திருந்தார்கள் என்பதை இந்த ஹதீஸ் திட்டவட்டமாகக் கூறவில்லை. மேலும் இதில் இரண்டு அறிவிப்பாளர்கள் பலவீனர்களாக உள்ளனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொப்பி அணிந்திருந்தனர் என்று கூறும் எந்த ஆதாரப்பூர்வமான செய்தியும் இல்லை என்பதை நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நரை முடிகளைக் கூட எண்ணிச் சொல்லும் நபித் தோழர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொப்பி அணிந்ததாகக் கூறவில்லை என்றால் அவர்கள் தமது வாழ்நாளில் ஒரு தடவை கூட தொப்பி அணிந்திருக்கவில்லை என்பது உறுதி.
அன்றைய மக்கள் சிலரிடம் தொப்பி அணியும் வழக்கம் இருந்துள்ளது. அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதித்துள்ளனர் என்று கூற முடியுமே தவிர தொப்பி அணிவது கடமை என்றோ, சுன்னத் என்றோ கூற ஒரு ஆதாரமும் இல்லை.
ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்தவர் சட்டை, தலைப்பாகை, காற்சட்டைகள், தொப்பிகள் அணிய வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி 134, 366, 1838, 1842, 5794, 5803, 5805, 5806)
இஹ்ராம் கட்டிய போது தொப்பி அணியக் கூடாது என்றால் மற்ற நேரங்களில் அணியலாம் என்பதை விளங்கிக் கொள்ள முடியும்.
இவ்வாறு சில நபித் தோழர்கள் தொப்பி அணிந்திருந்தது கூட தொழுகைக்காக அல்ல. சாதாரணமாக ஓர் ஆடை என்ற அடிப்படையில் தான் அணிந்துள்ளனர் என்பதற்கு ஆதாரங்கள் கிடைக்கின்றன.
(தொப்பி) கலன்ஸுவத் என்பதற்கு மொழி ஆய்வாளர் அபூஹிலால் அஸ்கரீ அவர்கள் விளக்கம் அளிக்கும் போதுஇ வெயிலிலிருந்தும் மழையிலிருந்தும் காக்கும் உடை என்று விளக்கம் தருகின்றார். மேலும் அதன் மேல் தலைப்பாகையைச் சுற்றலாம் என்றும் கூறுகின்றார்.
வெயிலில் இருந்தும், மழையில் இருந்தும் காக்கும் அளவுக்குக் கனமான, அடர்த்தியான கவசம் போன்ற ஆடை தான் தொப்பியைக் குறிக்கும் கலன்ஸுவத் என்ற அரபுச் சொல்லுக்கு அர்த்தமாகும். தொழுகையுடன் இதற்கு எந்தச் சம்பந்தமும் இல்லை.
ஷரீக் அவர்கள் ஒரு ஜனாஸா தொழுகை நடத்தும் போது தமது தொப்பியைக் கழற்றி முன்னால் வைத்துக் கொண்டு தொழுகை நடத்தினார்கள் என்று கூறப்படுகின்றது. (நூல்: அபூதாவூத் 592)
தொழுகைக்கு வெளியே வெயிலுக்காக அணிந்திருந்த தொப்பியை தொழுகையின் போது கழற்றி வைத்திருக்கின்றார் என்பதிலிருந்து அன்றைக்குத் தொப்பியைச் சிலர் அணிந்தது ஏன் என்பது விளங்குகின்றது.
உமர் (ரலி) அவர்கள் தொழுகை நடத்திக் கொண்டிருந்த போது, அவர்களை ஒருவன் கத்தியால் குத்தினான். குத்தி விட்டு அவன் ஓடும் போது ஒருவர் அவன் மேல் தொப்பியை வீசியெறிந்து தாக்கினார். இதனால் நிலை குலைந்து போன அவன், பிடிபடக் கூடாது என்பதற்காக தற்கொலை செய்து கொண்டான் என்ற செய்தி புகாரியில் 3700வது ஹதீஸாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தொப்பியை எறிந்து ஒருவரை நிலை குலையச் செய்ய முடியும் என்றால் அன்றைக்கு வழக்கத்தில் இருந்த தொப்பி எதுவென்று நம்மால் அறிந்து கொள்ள முடிகின்றது. ஏறக்குறைய இரும்புக் கவசம் போன்ற கடினமான தலையாடை தான் தொப்பி என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
இன்று தொப்பி என்ற பெயரால் அணியப்படும் ஆயிரம் கண்ணுடைய ஆடை(?)யால் மழையையும், வெயிலையும் தடுக்க முடியாது. அதன் மூலம் ஒரு ஈயைக் கூட நிலை குலையச் செய்ய முடியாது.
மீண்டும் சுருக்கமாகச் சொல்வதென்றால்
தொப்பி அணியுமாறு ஆர்வமூட்டி எந்த நபிமொழியும் இல்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் வாழ்நாளில் ஒரு தடவை கூட தொப்பி அணிந்ததில்லை.
சில நபித் தோழர்கள் அணிந்துள்ளனர்.
வெயில், மழையிலிருந்து காக்கவே அதை அணிந்துள்ளனர். தொழுகைக்காக அல்ல.
அந்தத் தொப்பிக்கும் இன்று தொப்பி என்று கூறப்படுவதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.
தொப்பி என்பது ஒரு ஆளைத் தாக்கி நிலை குலையச் செய்யும் ஆயுதமாகக் கூடப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தொப்பியை இஸ்லாத்தின் சின்னமாக அறிவிக்க யாருக்கும் அதிகாரமில்லை.
தொழுகையின் போது தொப்பி அணிய வேண்டும் என்று கூறுவதற்கும் ஆதாரமில்லை.
தொப்பி அணியாதவர்கள் பள்ளியில் தொழ அனுமதியில்லை என்று கூறவும் யாருக்கும் அதிகாரம் இல்லை.
தலையை மறைத்துக் கொள்ள உபரியான ஆடை இருந்தும் வேண்டுமென்றே மறைக்காமல் நபித்தோழர்கள் தொழுதுள்ளனர்.
ஜாபிர் (ரலி) அவர்கள் தமது கீழாடையை (பிடரி வரை தூக்கிக்) கட்டிக் கொண்டு தொழுதார்கள். அவர்களது உபரியான ஆடை மரச் சட்டத்தின் மீது வைக்கப்பட்டிருந்தது. அப்போது ஒருவர், ரூஙரழவ்ஒரு ஆடையுடனா தொழுகின்றீர்கள்?” என்று கேட்டார். அதற்கு ஜாபிர் (ரலி) அவர்கள், உன் போன்ற அறிவிலிகள் என்னைப் பார்க்க வேண்டுமென்றே இவ்வாறு செய்தேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் எங்களில் எவரிடம் இரண்டு ஆடைகள் இருந்தன?” என்று விடை யளித்தார்கள். (நூல்: புகாரி 352)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் தொப்பி போன்ற உபரி ஆடைகள் பலரிடம் இருந்ததில்லை என்பதற்கும், ஆண்கள் தலையை மறைப்பது அவசியம் இல்லை என்பதற்கும் இது மேலதிக ஆதாரமாக அமைந்துள்ளது.
ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் ஒரேயொரு ஆடையை அணிந்து தொழுதார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரேயொரு ஆடை அணிந்து தொழுததை நான் பார்த்துள்ளேன் எனவும் கூறினார்கள். (நூல்: புகாரி 353)
இடுப்புக்கு மேல் ஒரு ஆடை, இடுப்புக் கீழ் ஒரு ஆடை என இரண்டு ஆடைகள் அணியாமல், இரண்டுக்கும் சேர்த்து ஒரு ஆடை மட்டும் அணிந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுதுள்ளார்கள் என்பதிலிருந்து அவர்கள் தலையை மறைக்காமல் தொழுதுள்ளது உறுதியாகின்றது.
நம்முடைய பழக்க வழக்கம் என்ற அடிப்படையில் விரும்பியவர் தொப்பியை அணிந்து கொண்டால் தவறில்லை. தொழுகையின் போதோ, தொழுகைக்கு வெளியிலோ அவ்வாறு அணிந்து கொண்டால் அதைத் தடுக்க யாருக்கும் அதிகாரம் இல்லை.
அது போல் ஒருவர் தொழுகையின் போதோஇ தொழுகைக்கு வெளியிலோ தொப்பி அணியாமல் இருந்தால் அவரைத் தொப்பி அணியுமாறு கட்டாயப்படுத்துவதற்கும்இ ஆர்வமூட்டுவதற்கும் யாருக்கும் அதிகாரம் இல்லை.
தலைப்பாகை
தலைப்பாகையைப் பொறுத்த வரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தலைப்பாகை அணியுமாறு கட்டளையிட்டதாக ஆதாரப்பூர்வமான ஹதீஸ் ஏதுமில்லை. தலைப்பாகை அணியுமாறு சிறப்பித்துக் கூறியதாகவும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் ஏதுமில்லை.
தலைப்பாகை அணிவதை வலியுறுத்தும் வகையில் உள்ள ஹதீஸ்கள் யாவும் இட்டுக்கட்டப் பட்டவையாக அல்லது பலவீனமானவையாக உள்ளன.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தலைப்பாகையை வலியுறுத்தியதற்கு ஆதாரம் இல்லாவிட்டாலும் அவர்கள் தலைப்பாகை அணிந்தார்கள் என்பதற்கு ஆதாரம் உள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது தலைப்பாகையின் மீதும், காலுறைகள் மீதும் மஸஹ் செய்ததை நான் பார்த்துள்ளேன்.
அறிவிப்பவர்: அம்ரு பின் உமைய்யா (ரலி)
நூல்: புகாரி 205
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிம்பர் (மேடை) மீது கறுப்புத் தலைப்பாகை அணிந்து நின்றதை நான் பார்த்துள்ளேன்.
அறிவிப்பவர்: அம்ரு பின் ஷுரைஹ் (ரலி)
நூல்: முஸ்லிம் 2421
மக்கா வெற்றி கொள்ளப்பட்ட நாளில் கறுப்புத் தலைப்பாகை அணிந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஊரில் நுழைந்தார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் 2418
இப்படி விரல் விட்டு எண்ணிச் சொல்லும் அளவுக்கு சில சந்தர்ப்பங்களில் அவர்கள் தலைப்பாகை அணிந்துள்ளனர் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
அவர்கள் உளூச் செய்த போதும்இ உரை நிகழ்த்திய போதும்இ பல்வேறு வெற்றிகளைப் பெற்ற போதும் அவர்களைப் பற்றிப் பேசும் நூற்றுக் கணக்கான ஹதீஸ்களில் தலைப்பாகை அணிந்திருந்தார்கள் என்று கூறப்படவில்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தலையின் முடி அலங்காரம் பற்றி எண்ணற்ற ஹதீஸ்கள் உள்ளன. அவர்கள் எல்லா நேரத்திலும் தலைப்பாகையுடன் இருந்திருந்தால் தலை முடியின் அலங்காரம் பற்றி இவ்வளவு வர்ணனைகள் நமக்குக் கிடைத்திருக்க முடியாது.
எனவே மிகச் சில நேரங்களில் அவர்கள் தலைப்பாகை அணிந்துள்ளனர். பெரும்பாலான நேரங்களில் அவர்கள் தலைப்பாகை அணியாமல் இருந்துள்ளனர்.
மேலும் இன்னொரு அடிப்படையான விஷயத்தையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு வாதத்துக்காக எல்லா நேரங்களிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தலைப்பாகை அணிந்திருந் தார்கள் என்று வைத்துக் கொண்டாலும் கூட தலைப்பாகை அணிவது சுன்னத் என்று ஆகி விடாது.
ஒட்டகத்தில் பயணம் செய்தது, கோதுமை உணவை உட்கொண்டது, போர்வையைச் சுற்றிக் கொண்டு தொழுதது போன்ற காரியங்களை நாம் சுன்னத் என்று கூறுவதில்லை. வணக்க வழிபாடுகள் தொடர்பில்லாத காரியங்களைப் பொறுத்த வரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவற்றைச் செய்வதுடன், செய்யுமாறு ஆணையிட்டால் தான் அது மார்க்கமாக ஆகும். மேற்கண்ட காரியங்களுக்கு எப்படி எந்தக் கட்டளையும் இல்லையோ அது போல் தலைப்பாகை அணிவதற்கும் கட்டளை இல்லை.
எனவே தொழுகையிலோ, தொழுகைக்கு வெளியிலோ ஒருவர் தலைப்பாகை அணிய விரும்பினால் அணியலாம். விரும்பினால் அணியாமலும் இருக்கலாம்.

கரண்டைக்கு கீழால் ஆடை அணியலாமா?


கீழாடையும் அதன் எல்லையும்

எஸ். அப்பாஸ் அலீ  MISc
கரண்டைக் காலில் ஆடை படும் வகையில் கீழாடை அணிவது தொடர்பாக இன்றளவும் மக்களிடையே தொடர்ந்து கருத்து வேறுபாடு நிலவி வருகின்றது. இப்பிரச்சனை தொடர்பாக பல கோணங்களில் சிந்திப்பதற்கு ஏற்ற வகையில் ஆதாரங்கள் அமைந்திருப்பதால் இதில் பலத்த சர்ச்சை நீடித்து வருகின்றது.
ஒருவர் பெருமையின்றி ஆடை தரையில் இழுபடாத வகையில் அணிந்தால் அது தவறில்லை என்ற கருத்தை நாம் கூறிக் கொண்டு வருகிறோம்.
நம்மைப் போல் சில அறிஞர்களும் இக்கருத்தைக் கொண்டிருக்கின்றனர்.
இதற்கு மாற்றமாக கரண்டையில் ஆடை படவே கூடாது என்றும் கரண்டைக்கு மேல் வரை மட்டுமே ஆடை அணிய வேண்டும் என்றும் சில அறிஞர்கள் கூறிக் கொண்டிருக்கின்றனர்.
பெருமை உள்ளவரும் பெருமை இல்லாதவரும் அனைவரும் இவ்வாறே அணிய வேண்டும் என்பது இவர்களின் வாதம்.
பெருமையை மையமாக வைத்து சட்டம் மாறுபடுவதாக நாம் கூறுகின்ற கருத்தை இன்றைக்கு பலர் விமர்சனம் செய்து கரண்டையில் ஆடை படவே கூடாது என்ற தங்களது கருத்து தான் சரியானது என்று வாதிட்டு வருகின்றனர்.
இவர்களின் கருத்தை நம்பிய பலர் தங்களுடைய கீழாடை கரண்டையில் படாத அளவிற்கு அதன் நீளத்தை குறைத்துக் கொண்டனர். இவ்வாறே ஆடை அணிய வேண்டும் என்று மற்றவர்களையும் வற்புறுத்தி வருகின்றனர். கரண்டையில் ஆடை படும் வகையில் ஆடை அணிபவர்களை விமர்சித்தும் வருகின்றனர்.
பெருமையுடன் அணிவது கூடாது; பெருமையின்றி அணியலாம் என நாம் வேறுபடுத்துவது தவறு என்ற இவர்களின் விமர்சனம் சரியா? தவறா? என்பது ஒரு புறம் இருக்கட்டும். ஒரு பேச்சுக்கு இவ்வாறு வேறுபடுத்துவது தவறு என்று ஏற்றால் கூட ஆடை கரண்டையில் கீழாடை படக்கூடாது என்று கூற முடியாது. மாறாக கீழாடை கரண்டையில் படுவதாலோ கரண்டையை மூடினாலோ தரையில் இழுபடாத வரை தவறில்லை என்ற நமது கருத்தே அப்போதும் மேலோங்கி நிற்கும்.
இதை விளக்குவதற்காக இந்த ஆய்வுக் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. ஆடையைக் கீழே தொங்க விடுவது தொடர்பாக வரும் ஹதீஸ்களில்
ஜர்ரு (ஆடையை தரையில் படுமாறு இழுத்துச் செல்வது) மற்றும்
இஸ்பால் (தரையில் படுமளவிற்கு ஆடையைத் தொங்க விடுவது)
ஆகிய இரண்டும் கூடாது எனக் கூறப்பட்டுள்ளது. இவ்விரு அரபுச் சொற்களுக்கு அரபு அகராதியில் என்ன பொருள் என்று பார்த்தாலே இப்பிரச்சனைக்கு இலகுவாக முடிவு கண்டு விடலாம்.
ஜர்ரு மற்றும் இஸ்பால் என்பதன் பொருள்
ஜர்ரு என்றால் இழுத்துச் செல்லுதல் என்பது அதன் பொருளாகும். ஒரு பொருளை தரை தாங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அப்பொருளை நகர்த்துவதற்கே இழுத்துச் செல்லுதல் என்று கூறப்படுகிறது.
பின்வரும் செய்தியில் ஜர்ரு (ஆடையை இழுத்துச் செல்வது) கண்டிக்கப்படுகின்றது.
5783 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தனது ஆடையைத் (தரையில் படும்படி) தற்பெருமையுடன் இழுத்துக் கொண்டு சென்றவனை அல்லாஹ் (மறுமையில்) ஏறெடுத்தும் பார்க்க மாட்டான்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
 புஹாரி 5783
தரையில் படுமாறு இழுத்துச் செல்லுதல் என்ற அர்த்தத்தில் ஜர்ரு என்ற வார்த்தை பல ஹதீஸ்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்வார்த்தைக்கு இதுவே சரியான பொருள் என்பதை அரபு படித்த அனைவரும் அறிவர். நமது கருத்துக்கு எதிர்க் கருத்தில் உள்ளவர்கள் கூட இந்த வார்த்தைக்கு நாம் கூறும் அர்த்தத்தையே கொடுக்கிறார்கள். அடுத்து இஸ்பால் என்ற வார்த்தையின் பொருளைப் பார்ப்போம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
உனது கீழாடையைக் கெண்டைக்காலின் பாதி வரை உயர்த்திக்கொள். இதை நீ விரும்பாவிட்டால் கரண்டைகள் வரை (அணிந்து கொள்). ஆடையை இஸ்பால் செய்வதை விட்டும் உம்மை எச்சரிக்கிறேன். ஏனென்றால் அது பெருமையின் ஒரு அங்கமாகும்.
அறிவிப்பவர் : ஜாபிர் பின் சுலைம்
நூல் : அபூதாவூத் (3562)
மேற்கண்ட செய்தி இஸ்பால் செய்யக் கூடாது என்று கூறுகிறது. இஸ்பால் என்றால் தரையைத் தொடும் அளவிற்கு ஆடையைத் தொங்க விடுவது என்பது பொருள் என அரபு அகராதி நூல்களும் அறிஞர்களும் குறிப்பிடுகின்றனர்.
ஒருவர் தன் ஆடையை இஸ்பால் செய்தார் என்றால் அதன் பொருள் ஆடையைத் தரையில் படும் அளவிற்கு தொங்க விட்டார் என்பதாகும்.
லிசானுல் அரப் (பாகம் : 11 பக்கம் : 319)
நடக்கும் போது தன் ஆடையைத் தரையில் படும் அளவிற்கு தொங்க விடுபவரே இஸ்பால் செய்பவர்.
நூல் : அந்நிஹாயது ஃபீ ஃகரீபில் அஸர் (பாகம் : 2 பக்கம் : 846)
இஸ்பால் என்றால் ஆடையைத் தரையில் படும் அளவிற்கு தொங்க விடுதலாகும் என்று கத்தாபீ என்பவர் கூறியுள்ளார்.
நூல் : துஹ்ஃபதுல் அஹ்வதீ (பாகம் : 1 பக்கம் : 407)
இஸ்பால் என்றால் நடக்கும் போது ஆடையைத் தரையில் படும் அளவிற்குத் தொங்க விடுவதாகும்.
நூல் : அவ்னுல் மஃபூத் (பாகம் : 2 பக்கம் : 340)
எனவே இஸ்பால் என்றாலும் ஜர்ரு என்றாலும் ஆடையைத் தரையில் படும் அளவிற்கு தொங்க விடுவதே இவ்விரு வார்த்தைகளின் பொருளாகும். இந்த அடிப்படையில் இவையிரண்டும் ஒரே பொருள் கொண்ட வார்த்தைகளாகும். இவ்வாறு ஆடை அணிவது கூடாது என்றே ஹதீஸ்கள் கூறுகின்றன.
இதை இங்கே நாம் குறிப்பிடுவதற்குக் காரணம் இஸ்பால் என்றால் கரண்டையைத் தொடுமாறு ஆடை அணியுதல் என்று சிலர் தவறாகக் கூறி வருகின்றனர். இஸ்பால் செய்வது ஹதீஸ்களில் கண்டிக்கப்படுவதால் கரண்டையில் ஆடை செல்லக் கூடாது என்று வாதிடுகின்றனர்.
இவர்களின் வாதம் தவறு என்பதை மேற்கண்ட ஆதாரங்கள் தெளிவாக எடுத்துரைக்கின்றன
கரண்டையைத் தாண்டி தரையில் இழுபடுவதைத் தடுக்கும் ஹதீஸ்களை கரண்டையில் படுவதைத் தடுப்பதாக கூறுவதை ஏற்க முடியாது.
கீழாடை கணுக்கால்களைத் தொடலாமா?
கீழாடையின் எல்லையைப் பற்றி பேசும் ஹதீஸ்கள் பல நபித்தோழர்கள் வழியாக வந்துள்ளன. இந்த ஹதீஸ்கள் யாவும் கரண்டையில் ஆடை படவே கூடாது என்று கூறவில்லை. மாறாக கரண்டையையும் சேர்த்து அதை மூடும் வகையில் ஆடை அணிந்தால் தவறில்லை என்றே கூறுகின்றன.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : கணுக் கால்களுக்குக் கீழே தொங்கும்  கீழாடை நரகத்திற்குச் செல்லும்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) அவர்கள்
நூல் : புகாரி (5787)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
கணுக்கால்களுக்கு கீழே செல்லும் கீழாடை நரகத்திற்கு (அழைத்து)ச் செல்லும்.
அறிவிப்பவர் : சமுரா (ரலி) அவர்கள்
நூல் : அஹ்மது (19309)
இவ்விரு செய்திகளில் கணுக் கால்களுக்குக் கீழே ஆடை அணிவது தான் தவறு என்று கூறப்படுகின்றது. எனவே கணுக்காலில் ஆடை அணிவதை இச்செய்தி அனுமதிக்கின்றது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
உனது கீழாடையைக் கெண்டைக்காலின் பாதி வரை உயர்த்திக் கொள். இதை நீ விரும்பாவிட்டால் கணுக் கால்கள் வரை (அணிந்து கொள்). ஆடையை இஸ்பால் செய்வதை விட்டும் உம்மை எச்சரிக்கிறேன். ஏனென்றால் அது பெருமையின் ஒரு அங்கமாகும்.
அறிவிப்பவர் : ஜாபிர் பின் சுலைம் (ரலி)
நூல் : அபூதாவுத் (3562)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். கீழாடை கெண்டைக்காலின் பாதி வரையும் கணுக்கால்கள் வரையும் இருக்கலாம். இதற்குக் கீழே செல்வதில் எந்த நன்மையும் இல்லை.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி) அவர்கள்
நூல் : அஹ்மது (13115)
கணுக்கால்கள் வரை ஆடை அணியலாம் என்று இங்கே கூறப்படுகின்றது. கணுக்கால்கள் வரை என்றால் அதன் முடிவுப் பகுதி வரை அணிந்து கொள்ளலாம் என்பதே இதன் நேரடிப் பொருள். எனவே கீழாடை கணுக்கால்களை தொடும் வகையில் அணிவது தவறல்ல.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ஒரு முஸ்லிமுடைய கீழாடை கெண்டைக்காலின் பாதிவரை இருக்க வேண்டும். அல்லது கெண்டைக்காலுக்கும் கணுக்கால்களுக்கும் இடையே இருந்தால் அதில் தவறு ஏதும் இல்லை. கணுக்கால்களுக்கு கீழ் செல்பவையே நரகத்திற்கு (அழைத்து)ச் செல்லும். யார் தனது கீழாடையை ஆணவத்துடன் இழுத்துச் செல்கிறாரோ அவரை அல்லாஹ் பார்க்கமாட்டான்.
அறிவிப்பவர் : அபூ சயீத் அல்குத்ரீ (ரலி)
நூல் : அபூதாவுத் (3570)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ஒரு இறை நம்பிக்கையாளரின் கீழாடை கெண்டைக்காலின் பாதி வரை இருக்க வேண்டும். கெண்டைக்காலுக்கும் கணுக்கால்களுக்கும் இடையே இருந்தால் அதில் தவறு ஏதும் இல்லை. கணுக்கால்களுக்கு கீழ் செல்பவையே நரகத்திற்கு(அழைத்து)ச் செல்லும்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
நூல் : தப்ரானீ
மேலுள்ள செய்திகள் அனைத்தும் கீழாடை கணுக்கால்களைத் தொடக்கூடாது என்று கூறவில்லை. மாறாக கீழாடை கணுக்கால்களைத் தொடுவதை அனுமதிக்கின்றன. கணுக்கால்களுக்குக் கீழே செல்பவை நரகத்திற்குச் செல்லும் என்ற வாசகம் கணுக்கால்களில் ஆடை பட்டால் தவறில்லை என்பதைத் தெளிவாக உணர்த்துகின்றது.
இந்தச் செய்திகள் அனைத்தும் ஒரே கருத்தைக் கொண்டிருந்தாலும் இவை வெவ்வேறு நபித்தோழர்கள் வழியாக அறிவிக்கப்படும் வெவ்வேறான அறிவிப்புக்களாகும். கணுக்கால்களைத் தொடும் வகையில் ஆடை அணியக் கூடாது என்று கூறுவோருக்கு மறுப்பாக இந்த ஆதாரங்கள் அமைந்துள்ளன.
கணுக்கால்களுக்குக் கீழ் என்பதன் விளக்கம்
மேலே நாம் சுட்டிக் காட்டிய செய்திகளில் கணுக்கால்கள் வரை அணியலாம் என்றும் கணுக்கால்களுக்குக் கீழ் அணியக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.
கணுக்கால்களுக்குக் கீழ் அணியக் கூடாது என்பதின் கருத்து தரையில் ஆடை படுமாறு அணியக் கூடாது என்பது தான். கணுக்கால்களுக்குக் கீழ் அணியக் கூடாது என்ற உத்தரவை இந்தக் கருத்தில் தான் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்பதைப் பின்வரும் செய்திகள் தெளிவுபடுத்துகின்றது.
ஹுஜைம் குலத்தைச் சார்ந்தவரான ஜாபிர் பின் சுலைம் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
நபி (ஸல்) அவர்கள் (என்னிடம்) நீ கெண்டைக்காலின் பாதிவரை கீழாடையை உடுத்திக்கொள். இதை நீ விரும்பாவிட்டால் கணுக்கால் வரை (உடுத்திக் கொள்). கீழாடையை (தரையில்) இழுத்துச் செல்வதை விட்டும் உம்மை எச்சரிக்கிறேன். ஏனென்றால் அது பெருமையின் ஒரு அங்கமாகும். பெருமை கொள்வதை அல்லாஹ் விரும்ப மாட்டான் என்று கூறினார்கள்.
நூல் : பைஹகீ (5853) அபூதாவுத் (3562)
இந்தச் செய்தியில் கணுக்கால் வரை அணியலாம் என்று முதலில் கூறப்படுகின்றது. இதன் பிறகு கீழாடையைத் தரையில் இழுத்துச் செல்லக் கூடாது என்று கூறப்படுகின்றது. அதாவது கணுக்கால்களுக்குக் கீழ் ஆடை செல்லக் கூடாது என்ற வாசகத்தைக் கூற வேண்டிய இடத்தில் தரையில் ஆடையை இழுத்துச் செல்லக் கூடாது என கூறப்பட்டுள்ளது. எனவே கணுக்கால்களுக்குக் கீழ் அணியக் கூடாது என்றால் தரையில் இழுபடுமாறு அணியக் கூடாது என்பதே அதன் பொருள் என இந்த ஹதீஸ் தெளிவாக்கி விட்டது.
சுருங்கச் சொல்வதென்றால் ஆடை தரையில் இழுபடாத அளவிற்கு நீட்டிக் கொள்ள நபியவர்கள் அனுமதி கொடுத்துள்ளார்கள் என்பதே இந்த ஆய்வின் சுருக்கம். அதாவது கணுக்கால்கள் வரை ஆடையை நீட்டலாம் என்பதும் தரையில் இழுபடாமல் ஆடையை அணியலாம் என்பதும் வெவ்வேறான கருத்துக்கள் அல்ல. மாறாக ஒரே கருத்தாகும்.
தரையில் இழுபடுமாறு ஆடை அணியக் கூடாது என்பதே சட்டம். இந்தச் சட்டத்தைச் சரியாகச் செயல்படுத்துவதற்கு கணுக்கால்கள் வரை உடுத்திக் கொள்ளலாம் என்று கூறப்படுகின்றது.
ஆடை தரையில் இழுபடாத வகையில் ஒருவர் அதிகபட்சமாக எவ்வளவு கீழே இறக்கினாலும் அவர் கணுக்கால்கள் வரை உடுத்தியதாகவே எடுத்துக் கொள்ளப்படும்.
நபியவர்களால் கண்டிக்கப்பட்டவர்கள்
கணுக்கால்களில் ஆடை படும் வகையில் அணிந்த ஒருவரை நபி (ஸல்) அவர்களோ நபித்தோழர்களோ கண்டித்ததாக ஒரு ஆதாரம் கூட இல்லை.
மாறாக ஆடை தரையில் படுமாறு இழுத்துச் சென்றவரை மட்டுமே நபியவர்கள் கண்டித்ததாக ஆதாரங்கள் உள்ளன. இதே போன்று நபித் தோழர்களும் ஆடையைத் தரையில் இழுத்துச் செல்பவர்களை மட்டுமே கண்டித்துள்ளார்கள்.
ஷரீத் (ரலி) அவர்கள் கூறினார்கள் :
தனது கீழாடையை இழுத்துச் சென்ற ஒருவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பார்த்தார்கள். உடனே அவரிடம் விரைந்து அல்லது ஓடிச் சென்று அல்லாஹ்வை அஞ்சிக் கொள். உனது கீழாடையை உயர்த்து என்று கூறினார்கள். நான் கவட்டைக் கால்களைக் கொண்டவன். என்னுடைய இரு முட்டுக்களும் மோதிக் கொள்ளும் (எனவே தான் இவ்வாறு அணிந்துள்ளேன்) என்று அவர் கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் உனது கீழாடையை உயர்த்திக் கொள். மாண்பும் வலிமையும் மிக்க அல்லாஹ்வின் படைப்பு அனைத்தும் அழகானதே என்று கூறினார்கள். இதற்குப் பிறகு அம்மனிதரின் கீழாடை கெண்டைக்காலின் பாதிவரை இருக்கும் நிலையிலேயே அம்மனிதர் தென்பட்டார்.
நூல் : அஹ்மது (18656)
முஸ்லிம் பின் யந்நாக் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், ஒரு மனிதர் தமது ஆடையைத் தரையில் இழுபடும்படி இழுத்துச் செல்வதைக் கண்டார்கள். அப்போது, “நீர் யார்?” என்று கேட்டார்கள். அவர் தமது குடும்பத்தைப் பற்றித் தெரிவித்தார். அவர் பனூ லைஸ் குலத்தைச் சேர்ந்தவராயிருந்தார். அவரை யாரென அறிந்து கொண்ட பின், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “தற்பெருமையடிக்கும் நோக்கத்துடனே தனது கீழாடையை (தரையில் படும் படி) இழுத்துச் சென்றவனை அல்லாஹ் மறுமையில் ஏறெடுத்துப் பார்க்க மாட்டான்’ என்று கூறியதை நான் இந்த என் இரு காதுகளால் கேட்டுள்ளேன்” என்றார்கள்.
முஸ்லிம் (4236)
முஹம்மத் பின் ஸியாத் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :
அபூஹுரைரா (ரலி) அவர்கள் பஹ்ரைன் நாட்டின் (ஸகாத் வசூலிக்கும்) அதிகாரியாக இருந்த போது, ஒரு மனிதர் தமது கீழாடையைத் தரையில் படும்படி இழுத்துக் கொண்டு செல்வதைக் கண்டார்கள். அப்போது தமது காலால் பூமியில் தட்டியவாறு “(இதோ! பெரிய) தலைவர் வருகிறார். (பெரிய) தலைவர் வருகிறார்” என்று (இடித்துக்) கூறலானார்கள்.
பிறகு “அல்லாஹ்வின் துதர் (ஸல்) அவர்கள் “அகம்பாவத்துடன் தனது ஆடையை (தரையில் படும்படி) இழுத்துச் செல்பனை அல்லாஹ் மறுமையில் ஏறெடுத்துப் பார்க்க மாட்டான்’ என்று கூறினார்கள்” என்றார்கள்.
நூல் : முஸ்லிம் (4239)
அம்ர் பின் மைமூன் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :
(உமர் (ரலி) அவர்களிடமிருந்து ஒரு) இளைஞர் திரும்பிச் சென்ற போது அவரது கீழங்கி தரையைத் தொட்டுக் கொண்டிருந்தது. (இதைக் கண்ட) உமர் (ரலி) அவர்கள், “அந்த இளைஞரை என்னிடத்தில் திரும்ப அழைத்து  வாருங்கள்” என்று கூறினார்கள். (அவர் திரும்பி வந்த போது), “எனது சகோதரரின் மகனே! உனது ஆடையை (பூமியில் படாமல்) உயர்த்திக் கட்டு! இது உன் ஆடையை நீண்ட நாள் நீடிக்கச் செய்யும்; உனது இறைவனுக்கு  அஞ்சி நடப்பதுமாகும்” என்று கூறினார்கள்.
புகாரி (3700)
கணுக்காலில் ஆடை படக்கூடாது என்போரின் ஆதாரங்கள்
முதல் ஆதாரம்
ஹுஜைமீ குலத்தைச் சார்ந்த நபித்தோழர் ஒருவர் கூறுகிறார் :
நான் நபி (ஸல்) அவர்களிடம் கீழாடையைப் பற்றிக் கேட்டேன். நான் கீழாடையை எது வரைக்கும அணியலாம் என்று கேட்டேன். அதற்கு அவர்கள் தனது முதுகை வளைத்து தன் கெண்டைக்காலின் எலும்பைப் பிடித்து இது வரை அணிந்து கொள். இதை நீ விரும்பாவிட்டால் இதற்குக் கீழே இது வரை அணிந்து கொள். இதை நீ விரும்பாவிட்டால் கணுக்கால்களுக்கு மேல் இது வரை அணிந்து கொள். இதையும் நீ விரும்பாவிட்டால் பெருமையடித்து ஆணவத்துடன் நடக்கும் யாரையும் மாண்பும் வலிமையும் மிக்க அல்லாஹ் விரும்ப மாட்டான் என்று கூறினார்கள்.
நூல் : அஹ்மது (15389)
இந்தச் செய்தியில் ஆடையை நீட்டுவதற்குக் கடைசி எல்லையாக கணுக்கால்களின் மேல் பகுதி கூறப்பட்டுள்ளது. இதை ஆதாரமாக வைத்து கணுக்காலில் ஆடை விழக் கூடாது. கணுக்காலுக்கு மேல் வரை மட்டுமே ஆடையை இறக்கலாம் என்று வாதிடுகின்றனர்.
இந்த அறிவிப்பை அபூ தமீமா என்பாரிடமிருந்து அபுஸ்ஸலீல் என்பவர் அறிவிக்கின்றார்.  இந்தச் செய்தியை அபூ தமீமாவிடமிருந்து அபுஸ் ஸலீல் மட்டும் அறிவிக்கவில்லை. அபூ தமீமாவிடமிருந்து அபுஸ்ஸலீல் உட்பட காலித் மற்றும் அபூ ஃகிஃபார் ஆகிய மூவர் அறிவித்துள்ளனர்.
இந்த மூவரும் நம்பகமானவர் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அபுஸ்ஸலீல் காலிதுக்கும் அபூ ஃகிஃபாருக்கும் மாற்றமாக இந்தச் செய்தியை அறிவித்துள்ளார்.
காலிதுடைய அறிவிப்பிலும் அபூஃகிஃபாருடைய அறிவிப்பிலும் கணுக்கால்கள் வரை அணியலாம் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது கணுக்கால்களின் மீது ஆடை படுவது தவறல்ல என்றே கூறப்பட்டுள்ளது. ஆனால் மேற்கண்ட அபுஸ்ஸலீலுடைய அறிவிப்பவில் கணுக்கால்கள் மீது ஆடை விழவே கூடாது என்று இதற்கு மாற்றமாகக் கூறப்பட்டுள்ளது.
அபுஸ்ஸலீலை விட காலிதே உறுதியானவர் என்பதாலும் அபூ ஃகிஃபாருடைய அறிவிப்பு காலிதுடைய அறிவிப்புக்கு மேலும் வலு சேர்ப்பதாலும் கீழாடை கணுக்கால்களைத் தொடலாம் என்று கூறும் காலிதுடைய அறிவிப்பே சரியானதாகும். கணுக்காலில் ஆடை படக்கூடாது என்று கூறும் அபுஸ்ஸலீலுடைய மேற்கண்ட அறிவிப்பு பலவீனமாகும்.
காலிதுடைய அறிவிப்பு
கெண்டைக்காலின் பாதிவரை கீழாடையை அணிந்துகொள். இதை நீ விரும்பாவிட்டால் கணுக்கால்கள் வரை அணிந்துகொள். கீழாடையை (தரையில் படுமாறு) நீட்டுவதை விட்டும் உம்மை நான் எச்சரிக்கிறேன். ஏனென்றால் அது பெருமையின் ஒரு அங்கமாகும். பெருமை கொள்வதை அல்லாஹ் விரும்பமாட்டான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : அஹ்மது (22121)
அபூ ஃகிஃபாருடைய அறிவிப்பு
உனது கீழாடையைக் கெண்டைக்காலின் பாதி வரை உயர்த்திக் கொள். இதை நீ விரும்பா விட்டால் கணுக்கால்கள் வரை (அணிந்து கொள்). கீழாடையை (தரையில்) தொங்க விடுவதை விட்டும் உம்மை எச்சரிக்கின்றேன். ஏனென்றால் அது பெருமையின் ஒரு அங்கமாகும். அல்லாஹ் (நாம்) பெருமை கொள்வதை விரும்ப மாட்டான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : அபூதாவுத் (3562)
அபூஹுரைரா (ரலி) இப்னு உமர் (ரலி) அபூசயீத் (ரலி) அனஸ் (ரலி) சமுரா (ரலி) ஆகிய ஐந்து நபித்தோழர்கள் வழியாக வந்த அறிவிப்புகளை முன்னர் பார்த்தோம். இந்த அறிவிப்புகளும் கணுக்காலில் ஆடை படுவதை அனுமதிக்கின்றன.
எனவே கணுக்காலில் ஆடை படக்கூடாது என்று கூறும் அபுஸ்ஸலீலுடைய அறிவிப்பு காலித் மற்றும் அபூஃகிஃபாருடைய அறிவிப்புக்கும் அந்த ஐந்து நபித்தோழர்கள் வழியாக வரும் அறிவிப்புகளுக்கும் மாற்றமாக இருப்பதால் அபுஸ்ஸலீலுடைய அறிவிப்பு தவறானதாகும்.
மேலும் காலித் மற்றும் அபூ ஃகிஃபாருடைய அறிவிப்புகளில் கணுக்கால்கள் வரை அணியலாம் என்று கூறப்படுவதைத் தொடர்ந்து தரையில் படும் வகையில் ஆடை அணியக் கூடாது என்றும் சேர்த்து கூறப்படுகின்றது.
ஆனால் அபுஸ்ஸலீலுடைய அறிவிப்பில் தரையில் படும் வகையில் ஆடை அணியக் கூடாது என்ற தகவல் கூறப்படவில்லை. எனவே அபுஸ்ஸலீலுடைய அறிவிப்பு முழுமையற்றதாகவும் பிழையானதாகவும் உள்ளது.
பல நம்பகமானவர்களின் அறிவிப்புகளுக்கு ஒருவரின் அறிவிப்பு மாற்றமாக இருந்தால் அவரது அறிவிப்பு ஏற்றுக் கொள்ளப்படாது என்ற ஹதீஸ் கலை விதியின் படி இதை ஏற்றுக் கொள்ள முடியாது.
இரண்டாவது ஆதாரம்
அபுல் காசிம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
இறை நம்பிக்கையாளரின் கீழாடை கெண்டைக் கால்களின் பாதி வரை இருக்க வேண்டும். இல்லையென்றால் இதற்குக் கீழே கணுக்கால்களுக்கு மேல் வரை இருக்க வேண்டும். இதற்குக் கீழே செல்பவை நரகத்திற்குச் செல்லும்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) அவர்கள்
நூல் : அஹ்மது (10151)
இந்தச் செய்தியில் கணுக்காலின் மேல் பகுதி இறுதி எல்லையாகக் கூறப்படுவதால் இதையும் ஆதாரமாக காட்டுகிறார்கள். இந்தச் செய்தியில் முஹம்மது பின் அம்ர் என்பவர் இடம் பெறுகிறார். இவர் நம்பகமானவர் எனினும் இவரிடமிருந்து தவறுகள் பல ஏற்படும் என்று இமாம் இப்னு ஹஜர் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட இந்தச் செய்தியில் இவர் தவறிழைத்துள்ளார் என்பது சந்தேகத்திற்கிடமின்றி தெளிவாகியுள்ளது. ஏனென்றால் இந்தச் செய்தியை அவர் அப்துர் ரஹ்மான் பின் யஃகூப் என்பாரிடமிருந்து அறிவிக்கின்றார்.
அப்துர் ரஹ்மான் பின் யஃகூபிடமிருந்து முஹம்மது பின் இப்ராஹீம் என்பாரும் இந்தச் செய்தியை அறிவித்துள்ளார். கீழாடை கணுக்கால்கள் வரை இருக்க வேண்டும் என்றே இவரது அறிவிப்பில் உள்ளது. அதாவது கீழாடை கணுக்கால்களைத் தொடுவது தவறல்ல என்றே இவருடைய அறிவிப்பில் உள்ளது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
இறை நம்பிக்கையாளரின் கீழாடை கெண்டைக்கால்களின் சதைப்பகுதி வரை இருக்க வேண்டும். இல்லையென்றால் கெண்டைக்காலின் பாதி வரை இருக்க வேண்டும். இல்லையென்றால் அவரது கணுக்கால்கள் வரை இருக்க வேண்டும். இதற்குக் கீழே செல்லும் ஆடை நரகத்திற்கு(அழைத்து)ச் செல்லும்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : அஹ்மது (7519)
முஹம்மது பின் இப்ராஹீம் உறுதியானவர் நம்பகமானவர். இவர் முஹம்மது பின் அம்ரை விட வலிமையானவர். எனவே இவருக்கு மாற்றமாக அறிவிக்கும் முஹம்மது பின் அம்ருடைய அறிவிப்பை ஏற்க இயலாது.
மேலும் இதே செய்தி அபூ சயீத் மற்றும் இப்னு உமர் (ரலி) அவர்கள் ஆகிய இருவர் வழியாகவும் வந்துள்ளது. இந்த சரியான அறிவிப்புகளில் கணுக்கால்கள் வரை அதாவது கணுக்கால்களை கீழாடை தொடலாம் என்றே கூறப்பட்டுள்ளது. கணுக்கால்களுக்கு மேல் வரை அணிய வேண்டும் என்று கூறப்படவில்லை. இந்த அறிவிப்புகளை முன்பே நாம் பார்த்து விட்டோம்.
எனவே முஹம்மது பின் அம்ருடைய அறிவிப்பு நம்பகமானவர்களின் அறிவிப்புக்கு மாற்றமாக இருப்பதால் கணுக்கால்களுக்கு மேல் அணிய வேண்டும் என இவர் தவறுதலாக அறிவித்திருப்பது தெளிவாகி விட்டது. இந்த தவறான அறிவிப்பை ஆதாரமாக எடுக்க இயலாது.
மூன்றாவது ஆதாரம்
ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறினார்கள் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் கெண்டைக்காலின் சதைப் பகுதியைப் பிடித்து இதுவே கீழாடையின் (எல்லையாக உள்ள) இடம். இதை நீ விரும்பா விட்டால் இதற்குக் கீழே அணிந்து கொள்ளலாம். இதையும் நீ விரும்பா விட்டால் கணுக்கால்களில் கீழாடைக்கு எந்த உரிமையும் இல்லை என்று கூறினார்கள்.
நூல் : திர்மிதி (1705)
இந்தச் செய்தியில் ஹுதைஃபா (ரலி) முஸ்லிம் பின் நதீர் அபூ இஸ்ஹாக் அபுல் அஹ்வஸ் மற்றும் குதைபா ஆகியோர் அறிவிப்பாளர்களாக இடம் பெற்றுள்ளனர்.
இதில் இரண்டாவதாக இடம்பெறும் அறிவிப்பாளர் முஸ்லிம் பின் நதீர் நம்பகமானவர் என்று அறிஞர்களால் நிரூபிக்கப்படவில்லை. இமாம் இப்னு ஹிப்பான் மட்டுமே இவரை நம்பகமானவர் என்று கூறியுள்ளார். இப்னு ஹிப்பான் நம்பகத்தன்மை உறுதி செய்யப்படாதவர்களை எல்லாம் நம்பகமானவர் என்று கூறும் அலட்சியப் போக்குடையவர் என்பதால் இவரது கூற்றை ஏற்க முடியாது.
நம்பகத்தன்மை உறுதி செய்யப்படாதவர்களை இமாம் இப்னு ஹஜர் அவர்கள் மக்பூல் என்ற வாசகத்தால் குறிப்பிடுவது வழக்கம். அறிவிப்பாளர் முஸ்லிம் பின் நதீரை இமாம் இப்னு ஹஜர் மக்பூல் என்றே குறிப்பிட்டுள்ளார்.
இவரது அறிவிப்பை முக்கிய ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது. மற்ற செய்திகளை வலுவூட்டுவதற்கு துணைச்சான்றாக எடுத்துக் கொள்ளலாம் என்ற கருத்தில் இமாம் தஹபீ மற்றும் அபூஹாதிம் ஆகியோர் கூறியுள்ளனர்.
மேற்கண்ட செய்தியை ஹுதைஃபா (ரலி) அவர்களிடமிருந்து இவர் மட்டுமே தனித்து அறிவிக்கின்றார். அத்துடன் கீழாடை கணுக்கால்களைத் தொடுவதால் தவறல்ல என்று கூறும் ஏராளமான சரியான அறிவிப்புகளுடன் முரண்படும் வகையில் அறிவித்துள்ளார். இவர் தனித்து அறிவித்தாலே ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றால் ஆதாரப்பூர்வமான செய்திகளுக்கு மாற்றமாக அறிவித்தால் அறவே ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே இந்த அறிவிப்பை ஏற்க இயலாது.
இவர் மேற்கண்ட செய்தியைப் பிழையாக அறிவித்திருந்தாலும் வேறு ஒரு நேரத்தில் சரியாக அறிவித்துள்ளார்.
ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறினார்கள் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் கெண்டைக்காலின் சதைப் பகுதியைப் பிடித்து இதுவே கீழாடையின் (எல்லையாக உள்ள) இடமாகும். இதை நீ விரும்பா விட்டால் இதற்குக் கீழே அணிந்து கொள்ளலாம். இதையும் நீ விரும்பாவிட்டால் கணுக்கால்களுக்குக் கீழ் கீழாடைக்கு எந்த உரிமையும் இல்லை என்று கூறினார்கள்.
நூல் : திர்மிதி (1705)
இந்த அறிவிப்பில் கணுக்கால்களுக்குக் கீழே எந்த உரிமையும் இல்லை என முஸ்லிம் பின் நதீர் சரியாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பே மற்ற சரியான ஆதரங்களுடன் ஒத்துப் போகின்றது. எனவே கணுக்கால்களில் கீழாடைக்கு எந்த உரிமையும் இல்லை என அவர் அறிவித்தது தவறு என்பது இதன் மூலமும் தெளிவாகிறது.

ஆய்வின் சுருக்கம்

கீழாடை தரையில் படுமாறு ஆடையை இறக்கி அணிவதையே மார்க்கம் தடை செய்கின்றது. கணுக்கால்கள் வரை ஆடை அணியலாம் என்பதன் கருத்து ஆடை தரையில் இழுபடாத வகையில் அணியலாம் என்பதாகும். கணுக்கால்களுக்குக் கீழ் ஆடை செல்லக் கூடாது என்பதன் கருத்து தரையில் ஆடை படுமாறு அணியக் கூடாது என்பதாகும்.
கணுக்கால்களின் முன் பகுதியே கீழாடையின் இறுதி எல்லை என்ற கருத்தில் வரும் செய்திகள் பலவீனமானவை. கணுக்கால்களின் மீது ஆடை படும் வகையில் அணிந்தால் தவறில்லை என்பதற்கு ஏராளமான ஹதீஸ்கள் ஆதாரமாக உள்ளன.
எனவே ஒருவர் தன் கீழாடையைத் தரையில் இழுபடாத வகையில் அணிந்தால் அதை மார்க்கம் தடை செய்யவில்லை. இது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட வழிமுறையாகும்.
அதே நேரத்தில் ஆடையை அனுமதிக்கப்பட்ட எல்லையைக் காட்டிலும் மேலே உயர்த்தி அணிவது சிறந்ததாகும். ஏனென்றால் நபி (ஸல்) அவர்கள் கெண்டைக்காலின் பாதி வரை அணிய வேண்டும் என்பதை முதல் உத்தரவாக பிறப்பிக்கின்றார்கள். இதை விரும்பா விட்டாலே இதற்கு அடுத்த நிலையை கடைப்பிடிக்குமாறு கூறுகிறார்கள். எனவே ஆடையை உயர்த்திக் கட்டுவது மார்க்கத்தில் சிறந்த நிலையாகும்.